கோசாலை கட்டப் போகும் குமார் மங்கலம் பிர்லா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை, இந்தியா: சில தினங்களுக்கு முன் தான் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் மும்பை மாநகருக்கு வந்து பல பெரிய வியாபாரிகளைச் சந்தித்தார்.

அதன் பயனாக பல்வேறு பிசினஸ் டீல்கள் தொடங்கி சின்ன சின்ன வேலைகள் வரை பல விஷயங்களுக்கு ஆள் பிடித்திருக்கிறார். பல அரசு திட்டங்களை தனியாரைக் கொண்டு செய்ய வைக்க முயன்று கொண்டிருக்கிறார்.

தற்போது மத்தியப் பிரதேசத்தில் 100 கோசாலைகளைக் கட்ட, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான பிர்லாவிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

கோசாலை

கோசாலை

அடுத்த 18 மாத காலத்துக்குள், மத்தியப் பிரதேசத்தில் 100 ஹை டெக் கோசாலைகளை, கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR - Corporate Social Responsibility) நிதியில் இருந்து கட்டிக் கொடுக்க முன் வந்திருக்கிறார் வொடாஃபோன் ஐடியா நிறுவன உரிமையாளர் குமார மங்கலம் பிர்லா. காங்கிரஸ் அரசு தன் மாநில தேர்தல் வாக்குறுதியிலேயே சுமார் ஒரு லட்சம் பசுக்களை பார்த்துக் கொள்ளும் விதத்தில் மத்தியப் பிரதேசம் முழுக்க 1,000 கோ சாலைகள் அமைக்கப்படும் எனச் சொல்லி இருந்தார்கள்.

ஸ்மார்ட் கோசாலைகள்

ஸ்மார்ட் கோசாலைகள்

இந்த 1,000 கோசாலைகளில் கவனிப்பார் யாரும் இல்லாமல் தெருவில் திரியும் மாடுகளுக்கு இந்த கோசாலைகள் பயன்படுத்தப் போகிறார்களாம். தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா கட்டித் தருவதாகச் சொல்லி இருக்கும் 100 ஹை டெக் கோசாலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அதற்கு முன்பே அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 300 ஸ்மார்ட் கோசாலைக் கட்டிக் கொடுக்க வேறு ஒரு கம்பெனி உடன் ஒப்பந்தங்கள் செய்யப் பட்டிருப்பதாகச் சொல்கிறது சில அரசுத் தரவுகள்.

சந்திப்பு

சந்திப்பு

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நடராஜன் சந்திரசேகரன், மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பவன் கோயன்கா, டாடா பொஅவர் நிறுவனத்தின் பிரவீர் சின்ஹா, க்ராசிம் நிறுவனத்தின் திலிப் கோர், ஹர்ஷ் கோயங்கா, திலிப் அகூரி, யஸ்வந்த் ஹோல்கர் அம்ரிஷ் படேல் என பல முன்னனி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பல பிசினஸ் மேன்களை மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத்தே சந்தித்துப் பேசி இருக்கிறாராம்.

டீல்கள்

டீல்கள்


மேலே சொன்ன தொழிலதிபர்களோடு பேசி என்ன மாதிரியான டீல்களை எல்லாம் முடித்திருக்கிறார் என்கிற விவரங்களை இனி அரசு தான் வெளி இட வேண்டும் எனச் சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். சமீபத்தில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தன் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை மத்தியப் பிரதேசத்தில் நிறுவன ஒப்புக் கொண்டிருக்கும் விஷயம் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதலீடுகளுடன் கூடிய வேலைவாய்ப்பு தான் தங்கள் அரசின் முக்கிய நோக்கம் என மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் ஓடிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி நம் தமிழகத்தின் எடப்பாடியாரும் கொஞ்சம் வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடுகளில் எல்லாம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

kumar mangalam birla is going to build 100 gaushalas in mp

kumar mangalam birla is going to build 100 gaushalas in mp
Story first published: Saturday, August 10, 2019, 18:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X