ரூ.9,197 கோடியை இழந்த இந்தியா.. அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைகளிலிருந்து வெளியேற்றம்!

டெல்லி : தொடர்ந்து எழு டிரேடிங் நாட்களில் மட்டும், 9,197 கோடி ரூபாய் மதிப்பிலான, அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளனவாம்.

இது சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் பொருளாதார பிரச்சனை, உள்நாட்டில் நிலவி வரும் சாதகமற்ற நிலையாலும், முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்களது முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த முதலீடுகளால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.9,197 கோடியை இழந்த இந்தியா.. அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைகளிலிருந்து வெளியேற்றம்!

எப்படியெனினும், மத்திய அரசு அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், விரைவில் வரியை குறைக்கலாம் என்றும் பொருளாதார நிபுனர்கள் கூறுகின்றனர்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அன்னிய முதலீடுகளானது, 11,134.60 கோடி ரூபாய் ஈக்விட்டி மார்கெட்டிலிருந்து வெளியேற்றம் கண்டுள்ளது. எனினும் இதுவே கடன் பிரிவில் 1,937.54 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்படுள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 9 வரையிலான காலத்தில் மட்டும் 9,197.06 கோடி முதலீடுகள் வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முந்தைய அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில், அதிகளவிலான வரி குறைக்கப்படலாம் என்றும், அது கடந்த பட்ஜெட்டிலேயே குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட்டில் இது குறித்த அறிக்கைகள் எதுவும் வெளியாகததால், முதலீட்டாளர்கள் அதிக ஏமாற்றம் அடைந்தனர். இதுவும் கூட ஒரு வகையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளது என்றும் நிபுனர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும், இந்த நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லை.

மேலும் அதிகரித்து வரும் அமெரிக்கா சீனா பிரச்சனையால், இரு பெரும் முக்கிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனாவினால், உலக நாடுகளும் பொருளாதார பின்னடைவை கண்டு வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பாவும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அமெரிக்கா தற்போது மீண்டும் செப்டம்பர் 1 முதல் 10 சதவிகித வரியை உயர்த்த போவதாக கூறியுள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை, மேலும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிரெக்ஸிட் ஒப்பந்தம், சிரியா பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளும் உலக பொருளாதார மந்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகள் லாபம் கொடுக்கும் அளவும் குறைந்துள்ளது. அதிலும் பல துறைகள் தொடர்ந்து நஷ்டத்தையே கொடுத்து வரும் நிலையில், பங்கு சந்தையில் உள்ள அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற தொடங்கியுள்ளன.

இதற்கு, மாற்றாக தங்கம் மற்றும் பாண்டுகளில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஈக்விட்டி சந்தைகளில் முதலீடுகள் குறைந்தும் வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+