ஒரு புறம் உலக நாடுகள் பூராவும், நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் பல நிறுவனங்கள், புதிய வேலை வாய்ப்புகள முடக்குவதுடன், இருப்பவர்களையே வீட்டிற்கு அனுப்பி வருகிறார்கள்.
அதிலும் ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் தொடர்ச்சியான பிரச்சனையால் சுமார் 3.50 லட்சம் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஒப்பிடும்போது இது பராவியில்லை எனினும், புதிய வாய்ப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தான் இப்படியொரு பிரச்சனை எனில் உலகம் பூராவும் இப்படிதான் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
பணியமர்த்துதல் நிறுத்தம்
இந்த நிலையில் Uber Technologies Inc நிறுவனம் தனது மென்பொருள் மற்றும் சேவைத் துறையில் பணியமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்த நிறுவனத்தின் புதிய பணியமர்த்துதலை முடக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
எந்த பிரிவிலும் ஆள் சேர்ப்பு இல்லை
இதுகுறித்து சான்பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், புதிய மென்பொரூள் பொறியாளர்கள் மற்றும் தயாரிப்பு மேலாளர்களைக் பணியமர்த்துவதை, இந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதன் வணிக வாகனங்கங்கள் துறையிலும் தற்போதைக்கு ஆட்களை சேர்க்க போவதாக இல்லை. எப்படியெனினும் இந்த ஆண்டுக்கான ஆளி சேர்ப்புகளை தேவையாக அளவு சேர்த்து விட்டதாகவும், புதிய பணியமர்த்துதல் தற்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளது உபெர்.
வருமானம் இழப்பு
உலகெங்கிலும் மிகத் திறமை வாய்ந்த பல பொறியாளர்கள் உட்பட பலரை இந்த நிறுவனம், தொடர்ந்து வேலைக்கு சேர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருமானம், இரண்டாவது காலாண்டில் மிக வலிமிக்கதாக உள்ளது என்றும், ஏனெனில் இந்த நிறுவனம் பெரிய அளவில் தனது வருமானத்தை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்த இரண்டாவது காலாண்டில் 5.24 பில்லியன் நிகர நஷ்டத்தை கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
400 பேர் பணி நீக்கம்
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஆரம்ப பொதுவிலையிலிருந்து 11 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் உபெர் கடந்த வாரம் நானூறு மார்கெட்டிங்க் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியதாகவும், அதோடு புதியதாக பணியமர்த்துதலையும் நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நீண்ட கால வளர்ச்சிக்கு பின்னர் இந்த நிறுவனம், எச்சரிக்கையாக முன்னதாகவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications