உலக பொருளாதாரம் ஒரு புறம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. இதனால் தொழில்துறை வளர்ச்சியும் மந்த நிலையிலேயே காணப்படுகிறது என்றும் கூறப்படும் நிலையில், இவர்கள் காட்டில் மட்டும் எப்படி பணமழையாக எண்ணத் தோன்றுகிறது.
அப்படி பட்ட பணக்காரர்கள் காட்டில் எவ்வளவு பணம் என்பதை தான் இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.

உலகளவில் 25 பணக்கார குடும்பங்கள் கிட்டதட்ட 1.4 டிரில்லியன் டாலர் செல்வத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும், இது கடந்த ஆண்டை விட 24 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த Ever green பணக்காரர்கள் பட்டியியலில் அதிக வருமானம் கொண்டவர்களில் முதலிடத்தில் உள்ளவர், வால்மார்ட் நிறுவனத்தின் வால்டன் தான். கடந்த ஆண்டு அறிக்கையின் படி, இவரின் ஒரு நிமிட வருமானம் 70,000 டாலர்களாம்.
ஆமாங்க.. வால்டனின் ஒரு நிமிட வருமானம் 70,000 டாலர்கள் ஆகும். இதே ஒரு மணி நேரத்திற்கு 4 மில்லியன் டாலர்களாம். இதுவே ஒரு நாளைக்கு 100 மில்லியன் டாலர்களாம். இந்த நிலையில் நாம் இதை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தில் 23,000 டாலர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியியலில், கடந்த ஜூன் 2018லிருந்து தர வரிசையில் முதலிடம் பெற்றது வால்மார்டின் குடும்பம் தான். கிட்டதட்ட இவர்களின் வருமானம் 39 பில்லியன் டாலரிலிருந்து, 191 பில்லியன் டாலர் வரை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே உலக அளவில் மிக பிரபலமான கேண்டி மிட்டாய் நிறுவனர் (candy), மார்சின் வருமானம், கடந்த 2018ம் ஆண்டு, 37 பில்லியன் டாலரிலிருந்து, 127 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
இதுவே மூன்றாவது இடத்தில் உள்ள Kochs தொழிலதிபர் மற்றும் அரசியல் வாதியான இவரின் வருமானம், 26 பில்லியன் டாலரிலிருந்து, 125 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு அடுத்த இடத்தில் சவுதியை சேர்ந்த குடும்பம் 100 பில்லியன் டாலர் அளவிலும், Wertheimer family பிரான்சை சேர்ந்த குடும்பம் 57.6 பில்லியன் டாலர்களுடனும், தொழிலதிபர் Hermes 53.1 பில்லியன் டாலர்களும் உள்ளனராம்.
இந்த பட்டியியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி 7 பில்லியன் டாலரிலிருந்து, 50 பில்லியன் டாலர் வரை அவரது வருமானம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உலகம் பொருளாதார மந்த நிலையில் இருந்தாலும் இவர்களின் காட்டில் எப்போதும் மழைதான் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.


Click it and Unblock the Notifications