மும்பை, இந்தியா: உலகப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய பங்கு கொண்ட அமெரிக்கா மற்றும் சீனாவால் நடத்தப்பட்டு வரும் வர்த்தகப் போர் தான் உலக பொருளாதாரம், Recession-ஐ நோக்கிக் கொண்டு போவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி.
கடன் பத்திரங்களின் மீதான வருமானங்கள் குறைவது போன்ற காரணிகள் உலக பொருளாதார Recession-ஐ உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. 2008 காலங்களில் ஏற்பட்ட Recession-க்கு முன்பு கூட இதே போல கடன் பத்திரங்கள் மீதான வருமானம் குறைந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஒருவேளை மீண்டும் அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மேலும் வரி அதிகரித்தால் அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் உலக பொருளாதாரம், Recession-ல் சென்று நிற்கும் எனச் சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி. இந்தியா Recession-க்கு அருகில் இல்லை என்றாலும், சில துறைகளில் கடுமையான சரிவைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு Recession பிரச்னைக்கு மிக அருகில் இருப்பதாகவே தெரிகிறது.
இந்தியப் பொருளாதாரம் கடந்த மூன்று காலாண்டுகளாக தொடர்ந்து இறக்கம் கண்டு கொண்டே வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் கணிப்புகள் கூட அதிகரிப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் முக்கிய துறைகள் மற்றும் தொழிற்துறை உற்பத்தி போன்றைவைகளும் தொடர்ந்து இறக்கம் கண்டு கொண்டே இருக்கின்றன.
தற்போது இங்கிலாந்தும், சில ஐரோப்பிய பொருளாதாரங்களும் தான் Recession-ன் விளிம்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் காரணத்தால், இங்கிலாந்துக்கு Recession சிக்கல் அதிகமாக இருக்கிறதாம்.
இந்த நிலைமையை சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா சார்பாக ஆர்பிஐ 35 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்திருக்கிறார்கள். நியூஸிலாந்து 50 அடிப்படைப் புள்ளிகளையும், தாய்லாந்து 0.25 சதவிகித வட்டி விகிதத்தையும் குறைத்திருக்கிறார்கள்.
இத்தனையையும் சொல்லும் மார்கன் ஸ்டான்லி, இந்தியாவை எச்சரிக்கவும் செய்கிறது. அரசும், நாட்டின் கொள்கையை வகுப்பவர்களும் தங்களைக் காத்துக் கொள்ள இன்றில் இருந்தே வேலையைத் தொடங்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறது மார்கன் ஸ்டான்லி.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications