மும்பை, இந்தியா: Reliance இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டம், பிர்லா மதுஸ்ரீ சபகர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் Reliance நிறுவனத்தின் ஏகப்பட்ட முக்கியமான விஷயங்களைச் சொல்லி இருக்கிறார் Reliance குழும நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
Reliance ஜியோ மற்றும் Reliance ரீடெயில் தனித் தனி நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் மதிப்பு அடிப்படையில், இரண்டுமே இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடிக்குமாம்.
Reliance ரீடெயில் இந்தியாவின் அனைத்து ரீடெயில் நிறுவனத்தை விடவும் பெரிதாக இருக்கிறது. Reliance இண்டஸ்ட்ரீஸ் தான் இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர். இந்திய சுங்க வரி மற்றும் கலால் வரித் துறைக்கு அதிக வரி செலுத்தும் தனியார் நிறுவனம் Reliance இண்டஸ்ட்ரீஸ் தான் எனப் பெருமையாகச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி.
பங்கு விற்பனை
சவுதி அராம்கோ என்கிற நிறுவனம், Reliance இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் oil to chemical division-ல் 20 சதவிகித பங்குகளை வாங்க இருக்கிறதாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவுக்கு சுமார் 75 பில்லியன் டாலர் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எனவே இந்த 20% டீலுக்கு விலையாக சுமார் 15 பில்லியன் டாலர் விலை பேச இருக்கிறார்களாம். இந்த டீலுக்குப் பின், ஒவ்வொரு நாளும் சுமார் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை Reliance சுத்தீகரிப்பாலைக்கு சவுதி அராம்கோ கொடுக்கும் எனவும் சொல்லி இருக்கிறார். அதே போல Reliance நிறுவனம் தன் எரிபொருள் ரீடெயில் வியாபாரத்தில் 49 சதவிகித பங்குகளை பாரத் பெட்ரோலியத்துக்கு விற்பதால் சுமார் 7,000 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.
ஜியோ
வரும் செப்டம்பர் 05, 2019 அன்று முதல் ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டம் செயல்பாட்டுக்கு வரப் போகிறதாம். இந்தியா முழுவதுமாக கொண்டு வர அடுத்த 12 மாதங்கள் வரை ஆகலாம் எனச் சொல்லி இருக்கிறார் அம்பானி. அதோடு Reliance ஜியோ நிறுவனத்தில் செய்ய வேண்டிய முதலீடுகள் எல்லாம் முடிந்துவிட்டது எனவும் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின் படி இணைய வேகம் சுமார் 100 எம்பிபிஎஸ் தொடங்கி 1 ஜிபிபிஎஸ் வரை இருக்குமாம். உலகில் Reliance ஜியோ நிறுவனம் போட்டிருக்கும் ஃபைபர் கேபிள்களை எடுத்து அளந்தால் இந்த பூமியை 11 முறை வலம் வர முடியுமாம்.
ஹெட் செட்
Mixed Reality (MR)ரக ஹெட் செட்களையும் கூடிய விரைவில் Reliance சந்தைக்கு கொண்டு வரப் போகிறார்களாம். ஏற்கனவே இந்த Mixed Reality (MR)ரக ஹெட் செட்கலைத் தயாரிக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ரிலையன்ஸ் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த Mixed Reality (MR) ரக ஹெட் செட்களும் இந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஒரு டெமோவேறு கொடுக்கப்பட்டது. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின் விலை சுமார் 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
சினிமா
ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரீமியம் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே புதிதாக ரிலீஸ் ஆகும் படத்தைப் பார்க்க முடியும் எனவும் சொல்லி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்த சேவை வரும் 2020-ம் ஆண்டில் இருந்து கொண்டு வருவார்களாம். ஜியோ ஜிகா ஃபைபர் வரவேறுத் திட்டத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள் ஆண்டுத் திட்டத்தைத் தேர்வு செய்தால் அவர்களுக்கு ஒரு புதிய Jio Forever plan திட்டத்தின் கீழ் ஹெச் டி டிவி, அல்லது பிசி வழங்கப்படுமாம். அதோடு 4 கே செட் டாப் பாக்ஸும் இலவசமாக வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications