குடியிருப்பு வீடுகள் விற்பனை சரிவு..! புதிய வீடுகளுக்கான திட்டங்கள் அதிகரிப்பு..!

பெங்களூரூ: இந்தியாவின் முக்கிய நகரங்களில் 2019 - 20 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில் குடியிருப்புக்கான வீடுகளின் விற்பனை கொஞ்சம் குறைந்திருக்கிறதாம். ஆனால் இதே காலகட்டத்தில் புதிய வீடுகள் திட்டங்கள் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே தொடங்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில், 2019 - 20 நிதி ஆண்டுக்கான குடியிருப்பு வீடுகளின் மொத்த விற்பனை 69,485-ஆக இருக்கிறதாம். இது கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்ற குடியிருப்பு வீடுகளை விட 212 வீடுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 69,689 வீடுகள் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் விற்கப்பட்டதாக Liases Foras என்கிற அமைப்பு சொல்லி இருக்கிறது.

குடியிருப்பு வீடுகள் விற்பனை சரிவு..! புதிய வீடுகளுக்கான திட்டங்கள் அதிகரிப்பு..!

இந்தியாவின் முக்கிய எட்டு நகரங்களில் கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்ற வீடுகளை விட, ஹைதராபாத்தில் 33 சதவிகித வீடுகள் கூடுதலாக விற்கப்பட்டிருக்கின்றனவாம். அதே போல கொல்கத்தாவில் 25 சதவிகித வீடுகள் கூடுதலாக விற்கப்பட்டிருக்கின்றனவாம். இப்படி இந்தியாவின் மற்ற பகுதியைச் சேர்ந்த முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்க, இந்தியாவின் தலைநகரான டெல்லி என் சி ஆர் பகுதியில் கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டை விட சுமார் 19 சதவிகித வீடுகள் விற்பனை குறைந்திருக்கிறதாம்.

2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் விற்ற மொத்த வீடுகளில் சுமார் 54 சதவிகித வீடுகள் 50 லட்சம் ரூபாய்க்குக் கீழ் விலை கொண்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்திய ரியல் எஸ்டேட் துறை அரசின் பல்வேறு திட்டங்களால் ஓரளவுக்கு விற்பனை ஆகி வருகிறது என Liases Foras அமைப்பின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் கபூர் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவின் டாப் 8 நகரங்களில், 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 65,111 புதிய ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறதாம். இது கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் தொடங்கிய திட்டங்களின் எண்ணிக்கையை விட 6 சதவிகிதம் அதிகம் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த 65,111 புதிய வீடுகள் திட்டங்களில் 20,108 புதிய வீடுகள் திட்டம் மும்பை பகுதியில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பைக்கு அடுத்து அதிகப்படியாக 14,616 வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டு புனே இரண்டாவது இடத்திலும், 9,555 புதிய வீடுகள் திட்டத்துடன் என் சி ஆர் பகுதி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனவாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+