ஐடி துறையில் அதிகரிக்கும் Attrition rate..! சிக்கலில் ஐடி நிறுவனங்கள்..!

சென்னை, தமிழ் நாடு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், காக்னிசண்ட், விப்ரோ போன்றவைகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு Attrition rate அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Attrition rate அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக போதுமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள் இந்தியாவிலும், ஆன் சைட்டிலும் குறைவாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஐடி நிறுவனங்கள்.

இந்திய நிறுவனங்களில் இன்ஃபோசிஸ், காக்னிசண்ட் இந்தியா மற்றும் விப்ரோ ஆகிய மூன்று நிறுவனங்களில் தான் இந்த Attrition rate அதிகமாக இருக்கிறதாம்.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த ஜூன் 2019 காலாண்டில் Attrition rate 23.4 சதவிகிதமாக இருக்கிறது. அதற்கு முந்தைய மார்ச் 2019 காலாண்டில் Attrition rate 20.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய டிசம்பர் 2018- காலாண்டில் 19.9%, அதற்கு முந்தைய செப்டம்பர் 2018 காலாண்டில் 22.2%, ஜூன் 2018 காலாண்டில் 23% என Attrition rate இருந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் Attrition rate அதிகரித்திருக்கிறது.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இந்த Attrition rate ஜூன் 2019 காலாண்டில் 21 சதவிகிதமாக இருக்கிறதாம். கடந்த ஜூன் 2018 காலாண்டில் டெக் மஹிந்திராவில் Attrition rate 19 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல எல் அண்ட் டி இன்ஃபோடெக் ஐடி நிறுவனத்தில் இந்த Attrition rate 18.3 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறதாம். எல் அண்ட் டி ஐடி நிறுவனத்தில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் Attrition rate 15 சதவிகிதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

"பொதுவாக ஐடி துறையில் வியாபாரம் நிலையாக இருந்தால் Attrition rate சுமாராக 13 - 15 சதவிகிதமாக இருக்கும். இன்று நிறைய டெக்னாலஜி சார்ந்த புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நிறைய திறமையானவர்கள் தேவையாக இருக்கிறார்கள். நிறைய திறன்கள் (Skills) தேவைப்படுகிறது" எனச் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீன் ராவ். அதோடு தற்போது இருக்கும் Attrition rate கீழ் நிலை ஊழியர்களில் தான் அதிகமாக நடைபெற்றிருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இனி வரும் காலாண்டுகளில் இதை சரி செய்து கொள்ளவும் வேலை பார்த்து வருகிறார்களாம்.

அழுத்தம்

அழுத்தம்

ஐடி ஊழியர்கள் தங்களின் மேற்படிப்புக்காகவோ அல்லது தங்கள் போனஸ்களை பெற்றுக் கொள்வதற்காகவோ தங்கள் வேலையை விட்டு இந்த ஜூன் 2019 காலாண்டில் வெளியேறி இருக்கிறார்களாம். ஆனால் தொடர்ந்து ஐடி நிறுவனங்களுக்குத் தேவையான திறமைசாலிகள் இந்தியாவிலும் சரி, அமெரிக்க சந்தையிலும் சரி போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதால் ஐடி நிறுவனங்களில் சிக்கல்களும் அழுத்தங்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் ஐடி நிறுவனத்தினர்கள்.

துணை காண்டிராக்டர்கள்

துணை காண்டிராக்டர்கள்

ஐடி நிறுவனங்களில் Attrition rate 0.2 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் கோட்டக் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனத்தின் கவால்ஜித் சலூஜா. இத்தனை பெரிய Attrition rate கூட ஐடி நிறுவனங்களின் ப்ராஜெக்ட் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு ஐடி நிறுவனங்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள துணை காண்டிராக்டர்களை அதிகம் நம்ப வேண்டி இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+