மங்களூரு : கடந்த சில வாராங்களாகவே கர்நாடாகா மற்றம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை, கடந்த சில வாராங்களாகவே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் பல ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் முழ்கும் அளவுக்கு பலத்த மழை எனலாம்.
இந்த நிலையில் பல லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல லட்சக்கணக்கான வீடுகள் பாழடைந்தும், தங்களது வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
ஆமாங்க.. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பாதியிலிருந்தே தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களிலேயே பெய்த கனமழையால், அப்போதைக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றே கூறலாம்.
பருவமழையால் பாதிப்பு
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதலே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம டைந்து வருகிறது. இந்த நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், குடகு, மைசூர், சிக்க மங்களூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, பல ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததோடு, மக்கள் வீடு,தங்களது முக்கிய உடைமைகளையும் இழந்து வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணா நதியிலும் வெள்ள பெருக்கு
இதே சமயம் மராட்டிய மாநிலத்திலும் கொட்டி கொண்டிருக்கும் கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடிகளாக நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதனை சுற்றியுள்ள கர்நாடாகா எல்லையில் அமைந்திருக்கும் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் வீடுகட்ட உதவி கோரி கோரிக்கை!
இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா சென்ற போது, சிலர் தங்களது வீடுகளை இழந்து தவிப்பதாகவும், மீண்டும் வீடு கட்ட கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனராம். இதையடுத்து முதல்வர் எடியூரப்பா, புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளாராம். இது தவிர புதிதாக வீடு கட்டும் வரையிலோ அல்லது பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்யும் வரை, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாராம்.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.1 லட்சம்
இது தவிர வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக 10,000 ரூபாயும், வீடு கட்ட 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். மேலும் இதே வீடுகட்ட இடம் இல்லாதவர்களுக்கு போதிய இடம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளாராம்.
2,694 கிராமங்கள் வெள்ளத்தால் பதிப்பு
கர்நாடாகா மாநிலத்தில் 17 மாவட்டங்களில், 86 தாலுக்காக்களில், 2,694 கிராமங்கள், வெள்ளத்தாலும் மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் இதுவரை 42 பேர் இறந்துள்ளதாகவும், 12 பேர் காணமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மொத்தம் இதுவரை 5,81,897 பேர் வெள்ளத்தாலும் மழையாலும், தங்களது குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளனராம். இந்த நிலையில் 1,181 முகாம்களில் 3,32,629 பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications