டெல்லி : எந்த தொழில் எடுத்தாலும் அதில் கொடி கட்டி பறக்கும் முகேஷ் அம்பானி, அதில் தனக்கென தனி இடம் வகிப்பது கவனிக்கதக்க ஒரு விஷயமாகும்.
இந்த நிலையில், தனது ஆயில் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வரையிலான வர்த்தகத்திலுள்ள 20 சதவிகித பங்கினை, சவுதி அராம்கோ நிறுவனத்திற்கும் விற்க திட்டமிட்டுள்ளதாம்
ஏற்கனவே ஜியோ மூலம் மற்ற நிறுவனங்களை கதிகலங்க வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, இந்த பங்கு விற்பனையால், அதிரடியாக வேறு ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.
ரிலையன்ஸ் வரலாற்றில் அதிகளவிலான பங்கு விற்பனை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவிலான பங்கு விற்பனை என்பது இது தான் என்றும் கூறியுள்ளார். ஆமாங்க.. சவுதி அரேபியாவைச் சேர்ந்த மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு தான், ரிலையன்ஸ் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம் குறித்தான 20 சதவிகித பங்குகளை விற்றுள்ளது. இதன் மதிப்பு 75 பில்லியன் டாலராகும், இதன் இந்திய மதிப்பு சுமார் 5.3 லட்சம் கோடி ரூபாயாகும்.
ஒப்பந்தம் மூலம் தினசரி 5 லட்சம் பேரல் எண்ணெய்
மேலும் சர்வதேச அளவில், மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில், சவுதி அராம்கோ நிறுவனமும் ஒன்று. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின், இந்த பங்கு விற்பனையின் மூலம், சவுதி அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம் நகர் சுத்திகரிப்பு நிலையத்துற்கு தினசரி 5,00,000 லட்சம் பேரல்கள், கச்சா எண்ணெய் நீண்ட கால அடிப்படையில் சப்ளை செய்ய வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.
எண்ணெய் வர்த்தகத்தை புரட்டிபோடும் திட்டமா?
எந்த வர்த்தகமானலும் அதில் கொடி கட்டி பறக்கும் முகேஷ் அம்பானி, தற்போது சர்வதேச அளவிலான நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது, கச்சா எண்ணெயிலும் சில்லறை விற்பனையிலும், கால் பதிக்கும் திட்டமாகக் இருக்கலாம் என்றும் நிபுனர்கள் கருதுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்வோம்
இது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் முகேஷ் அம்பானி, ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது வரவேற்கத்தக்கது என்றும், தனது ரிலையன்ஸ் குழுமம் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கட்டாயம் முதலீடு செய்யும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications