Reliance-ன் ரூ. 1.54 லட்சம் கோடி கடனை காலி செய்து காட்டுகிறேன்..! முகேஷ் அம்பானி சபதம்..!

மும்பை: Reliance குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, அடுத்த 18 மாதங்களுக்குள் Reliance நிறுவனம் 0 கடன் உள்ள நிறுவனமாக மாறும் எனச் சொல்லி இருக்கிறார்.

இதன் முதல் படியாகத் தான் Reliance நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவில் 20 சதவிகித பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்திடம் விற்கப் போகிறாராம்.

Reliance நிறுவனம் பல்வேறு அந்நிய முதலீட்டாளர்களோடு கை கோர்த்து வியாபாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதையும் அம்பானியும் சொல்லி இருக்கிறார்.

கடன் தொல்லை

கடன் தொல்லை

தம்பி அனில் அம்பானியின் வியாபாரம் படுத்த போது, Reliance குழும நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் பற்றியும் தீவிரமாக கேள்விகள் எழத் தொடங்கியது. இந்த பிரச்னைகளைக் குறைக்க அம்பானி முன் வைத்திருக்கும் வழி தான், மற்ற நிறுவனங்கள் உடனான டீல்கள். எண்ணெய் வியாபாரத்தில் Reliance நிறுவனம் பாரத் பெட்ரோலியம் மற்றும் சவுதி அராம்கொ ஆகிய நிறுவனங்களோடு கை கோர்க்கப் போகிறது. டெலிகாம் உள்கட்டமைப்பில் ப்ரூப்ஃபீல்ட் (Brookfield) நிறுவனத்தோடும் கை கோர்க்க இருக்கிறது.

1.54 லட்சம் கோடி

1.54 லட்சம் கோடி

அம்பானியின் கணக்குப் படி Reliance நிறுவனத்திற்கு 1.54 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். இதைத் தான் அடுத்த 18 மாதங்களில் அதி வேகமாக குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். "வரும் மார்ச் 31, 2021-க்குள் நம்முடைய கடன்களைக் குறைக்க, கடன் இல்லாத (Zero Net Debt) நிறுவனமாக Reliance-ஐ மாற்ற, நம்மிடம் தெளிவான திட்டங்கள் இருக்கின்றன. நம் Reliance நிறுவனம் உலகிலேயே வலுவான நிதி நிலை கொண்ட நிறுவனமாக மாறும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை" என ரிலையன்ஸின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் அம்பானி.

2019 - 20-க்குள்

2019 - 20-க்குள்

Reliance நிறுவனம் தன் கடன்களை மட்டும் குறைத்துக் கொள்ளாமல், தன்னோடு இணைந்து செயல்பட புதிய கூட்டாளிகளையும் தேடுகிறது. சவுதி அராம்கோ மற்றும் பாரத் பெட்ரோலியம் உடனான உறவுகள் இருவருக்குமே வியாபார ரீதியாக வெற்றியைத் தரக் கூடிய உறவுகள். இதனால் இரு தரப்பிலுமான பிசினஸ் மதிப்புகள் கூடும். இந்த இரண்டு நிறுவனங்கள் உடனான டீல்கள் வழியாக சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடக்கப் போகிறது எனச் சொல்லி இருக்கிறார் அம்பானி.

ஒப்புதல்கள்

ஒப்புதல்கள்

இந்த ஒப்பந்தங்கள் இதே 2019 - 20 நிதி ஆண்டுக்குள்ளேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கிறார்களாம். தற்போது இந்த டீல் தொடர்பான இறுதி ஒப்பந்தங்கள், வழக்கமான சரி பார்ப்புகள், நெறிமுறையாளர்கள் மற்றும் அரசு நெறியாளர்களின் அனுமதிகள், மற்ற வழக்கமான அனுமதிகள் கிடைப்பது பொறுத்து டீல்கள் இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்குள்ளேயே நிறைவு அடையும் எனச் சொல்கிறார்கள் Reliance தரப்பினர்கள்.

கன்ஸ்யூமர் வியாபாரம்

கன்ஸ்யூமர் வியாபாரம்

எண்ணெய் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் தவிர்த்து, கன்ஸ்யூமர் வியாபாரங்களில் அம்பானி இன்னும் அதிக நம்பிக்கையோடு இருக்கிறாராம். குறிப்பாக Reliance நிறுவனத்துக்கு கிடைத்த சந்தை வரவேற்புக்குப் பின் அதிக உற்சாகத்தோடு இருக்கிறாராம். கடந்த ஆண்டு Reliance ரீடெயில் துறை சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் தான் Reliance ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, வருவாய் மற்றும் லாபத்தின் அடிப்படையில் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டாளிகள்

கூட்டாளிகள்

Reliance குழுமத்தின் கன்ஸ்யூமர் வியாபாரங்களான ஜியோ மற்றும் Reliance ரீடெயில் பிரிவில்... தங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து வலுவான வியாபார விருப்பங்கள் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் அம்பானி. எனவே வருங்காலங்களில் டெலிகாம் மற்றும் ரீடெயில் துறைகளில் சிறப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் உலக நிறுவனங்களை கூட்டாளிகளாக அழைத்து வருவோம் எனவும் சொல்லி இருக்கிறார் அம்பானி. அதோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் Reliance ரீடெயில் மற்றும் Reliance டெலிகாம் நிறுவனங்களை பட்டியலிடுவது குறித்தும் பேசி இருக்கிறார்.

ஆக தங்கள் கடன்களைக் குறைக்கும் அதே நேரத்தில் தங்கள் வியாபார எல்லைகளை விஸ்தரிக்கும் வேலையிலும் தெளிவாக இருக்கிறார் முகேஷ் அம்பானி.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+