Saudi Aramco உலகில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம்..! 6 மாத லாபம் 46 பில்லியன் டாலரா..?

ஆப்பிள், அமேஸான் என இதுநாள் வரை லாபத்துக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்த அனைத்து நிறுவனங்களையும் ஒரு நிறுவனம் ஓரங்கட்டி இருக்கிறது என்றால் நம்புவீர்களா..?

உலகிலேயே அதிகம் லாபம் சம்பாதிக்கும் கம்பெனி என்கிற முதல் இடத்தில் சிம்ம சொப்பனமாக அமர்ந்திருக்கிறது Saudi Aramco. இந்த Saudi Aramco நிறுவனத்தின் 2019-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் மட்டும் 46.9 பில்லியன் டாலர் லாபம் பார்த்திருக்கிறார்களாம்.

Saudi Aramco போலவே எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பல நிறுவனங்களும் எண்ணெய் விலை வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருக்கின்றனவாம். ஆனால் நம் Saudi Aramco மட்டும் லாபத்தில் நிற்கிறது.

பெரிய கம்பெனி

பெரிய கம்பெனி

உலகிலேயே எங்களிடம் தான் அதிக உற்பத்தித் திறன் கொண்ட, பெரிய எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன என தில்லாகச் சொல்லி இருக்கிறார் Saudi Aramco நிறுவனத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூத்த துணைத் தலைவர் காலித் அல் தபாக் (Khalid Al-Dabbagh). உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலை சரிவினால் திண்டாடிக் கொண்டிருக்கும் போது கூட, Saudi Aramco நல்ல நிதி நிலைகளைக் கொண்டிருப்பது தான் எங்கள் தாக்கு பிடிக்கும் திறனுக்கு எடுத்துக் காட்டு எனவும் சொல்லி இருக்கிறார்.

ஈவுத் தொகை

ஈவுத் தொகை

Saudi Aramco நிறுவனம், தான் ஈட்டிய முழு லாபத்தையும் ஈவுத் தொகைகளாக தன்னுடைய உடைமையாளர் சவுதி அரேபிய அரசுக்குக் கொடுத்து இருக்கிறதாம். இதில் சவுதி அரேபிய அரசுக்கு கொடுத்த 20 பில்லியன் டாலர் கூடுதல் சிறப்பு பே அவுட் டிவிடெண்டும் அடக்கமாம். கடந்த ஆண்டு சவுதி அரேபிய அரசுக்கு வெறும் 6 பில்லியன் டாலர் தான் பே அவுட் டிவிடெண்டாக கொடுத்தார்கள் என்பதையும் நிதி நிலை அறிக்கைகளில் பார்க்க முடிகிறது.

ஐபிஓ

ஐபிஓ

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, Saudi Aramco நிறுவனம் பங்குச் சந்தைகளில் ஐபிஓ (IPO - Initial Public Offering) முறைப்படி நிதி திரட்டவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அநேகமாக 2020 அல்லது 2021-ம் ஆண்டுகளில் Saudi Aramco நிறுவனம் ஐபிஓ வெளியிடும் என எதிர்பார்க்கலாமாம். சமீபத்தில் 12 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களை விற்று நிதி திரட்டுவதற்காக Saudi Aramco நிறுவனம் தன்னுடைய நிதி நிலை அறிக்கைகளை வெளியிட்டது. அது முதல் தான் இந்த நிறுவனத்தின் நிதி நிலைகள் பொது வெளிக்கு வரத் தொடங்கியது.

100 பில்லியனா..?

100 பில்லியனா..?

இந்த பெரிய எண்ணெய் நிறுவனம் ஐபிஓ முறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை திரட்ட யோசித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் Saudi Aramco நிறுவனம் தன்னுடைய 5 சதவிகித பங்குகளை மட்டும் விற்று இந்த பெரிய தொகையை திரட்ட விரும்புகிறது என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
சவுதி அரேபிய அரசு வருமானத்துக்கு, இந்த Saudi Aramco நிறுவனத்தைத் தான் பெரிய அளவில் நம்பி இருக்கிறது. தங்கள் முதலீட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொண்டது... போன்ற பல சிக்கன நடவடிக்கைகளால் தான் Saudi Aramco நிறுவனத்தின் பணப் புழக்கம் சுமார் 7 சதவிகிதம் அதிகரித்து 38 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறதாம்.

ரிலையன்ஸ் டீல்

ரிலையன்ஸ் டீல்

இப்போது இதே Saudi Aramco நிறுவனம் தான் இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரெட் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவில் சுமார் 20 சதவிகித பங்குகளை வாங்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியும் மகிழ்ச்சியாக ரிலையன்ஸ் குழுமத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+