சில வாரங்களுக்கு முன் தான் Cafe Coffee Day நிறுவனத்தின் நிறுவனர் வி ஜி சித்தார்த்தா காலமானார். Cafe Coffee Day பிராண்டின் தாய் நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் தற்போது தன்னுடைய குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை பிளாக் ஸ்டோன் குழுமத்துக்கு சுமார் 2,600 முதல் 3,000 கோடி ரூபாய் வரை விலை பேசி விற்க இருப்பதாக பங்குச் சந்தை சார் விவரங்கள் தாக்கலில் காபி டே நிறுவனமே சொல்லி இருக்கிறதாம்.
காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகப்படியான கடன்களைக் குறைக்கத் தான், தன்னுடைய இந்த 90 ஏக்கர் குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை விற்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். பலரும் பெங்களூரில் இருக்கும் குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை வாங்க முனைந்து கொண்டிருந்த போதிலும் பிளாக் ஸ்டோன் நிறுவனம் தான் அதிகம் விலை பேசி இருக்கிறார்கள் போல.

காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டேங்லின் டெவலெப்மெண்ட் லிமிடெட் (Tanglin Developments Limited) என்கிற நிறுவனம் தான் வைத்திருக்கிறார்களாம். ஆக இப்போது அந்த குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை வாங்குவதாகச் சொல்லி டேங்லின் டெவலெப்மெண்ட் லிமிடெட் (Tanglin Developments Limited) நிறுவனத்தையே வாங்கப் போவதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்களாம்.
தற்போது இந்த டீலை முடிப்பது பிளாக் ஸ்டோனின் சரி பார்ப்பு நடவடிக்கைகள், டாக்குமெண்ட் தஸ்தாவேஜ் வேலைகள், நெறிமுறையாளர்களின் அனுமதிகள் போன்றவைகள் கிடைப்பது பொறுத்து முடியுமாம். அநேகமாக சுமார் 30 - 45 நாட்களில் இந்த டீல் முடியும் என காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.
காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவும், இந்த குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை வைத்திருக்கும் டேங்லின் டெவலெப்மெண்ட் லிமிடெட் (Tanglin Developments Limited) நிறுவனத்தை விற்பதற்கான அனுமதியைக் கொடுத்திருக்கிறார்களாம்.
இந்த சொத்து விற்பனையால் காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன்கள் குறைந்து, காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள், கடன் கொடுத்தவர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்ற பங்கு தாரர்களைப் பாதுகாத்து அன்றாட வியாபார நடவடிக்கைகள் சிறப்பாக நடக்க உதவும் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications