இது நல்ல விஷயம் தானே.. ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு உண்டான தனிச் சிறப்பை கொடுத்து வந்த, 370 வது பிரிவினை அரசு கடந்த வாரம், பல எதிப்புகளுக்கும் மத்தியில் நீக்கியது.

இந்த நிலையில், இங்கு வணிகங்களை ஈர்க்கும் முயற்சியில் இந்த மாநில அரசு இறங்கியுள்ளது. ஆமாங்க.. இந்த மாநில நிர்வாகம் மூன்று நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது

இது நல்ல விஷயம் தானே.. ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

ஆமாங்க.. ஜம்மு-காஷ்மீருக்கு வணிகங்களை ஈர்க்கும் முயற்சியில், மாநில நிர்வாகம் மூன்று நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது

இந்த உச்சி மாநாடு, ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், அடுத்து வரும் அக்டோபர் 12 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும், இதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் பலம், உத்திகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் என்றும் மாநில முதன்மை செயலாளர் (Industries) நவீன் சவுத்ரி கூறியுள்ளார்.

மேலும் இந்த முதலீட்டாளர் மாநாடு மாநிலத்திற்கு வெளியே உள்ள வர்த்தக மற்றும் வணிக சமூகங்களின் மனதில் உள்ள அச்சத்தையும், தயக்கத்தையும் போக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாக இந்த மாநாடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த முதலீட்டாளர்கள் சந்திப்புக்கான, தேசிய கூட்டாளியாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (CII) இருக்கும் எனவும், ஜம்மு-காஷ்மீர் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (JKTPO) மற்றும் CII ஆகியவை இந்த நிகழ்வின் அமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாடு ஆனது வர்த்தக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள், அரசாங்கத்தின் வணிக நட்பு கொள்கைகள் பற்றி நேரடியாக அறிந்துகொள்வது, உள்கட்டமைப்பு, இயற்கை வளங்கள், மூலப்பொருள் மற்றும் திறன் மற்றும் கிடைக்காத திறமையான மனிதவளத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் மாநிலத்தில் வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கு நல் வழி வகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த உச்சி மாநாடு, இம்மாநிலத்தின் வணிக சமூகத்திற்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிக சமூகங்களுக்கும், இடையிலான தொடர்புகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இது அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global investors summit in Jammu Kashmir from October 12

Global investors summit in Jammu Kashmir from October 12
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X