டெல்லி : இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவை கண்டு வரும் ஆட்டோமொபைல் துறை, கடந்த ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 19 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 2000லிருந்து ஒப்பிடும்போது 21.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயணிகள் வாகன விற்பனையானது 31 சதவிகிதம் குறைந்து, 2,00,790 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2000ம் ஆண்டிலிருந்து ஒப்பிடும்போது 35.22 சதவிகிதம் குறைந்துள்ளது.
விற்பனை வீழ்ச்சி
அதிலும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், தனது உற்பத்தியை செயற்கையாகவே நிறுத்தியது காரணம், குர்கான் அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் அமைதியின்மையால் முடங்கியது. இந்த நிலையில் பயணிகள் விற்பனை 9 மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக வாகன விற்பனையும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. மொத்தத்தில் ஒட்டுமொத்த விற்பனையும் சரிந்துள்ளதால், ஒட்டுமொத்த வாகன விற்பனையும் 25.71 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. இதே போல் இரண்டு சக்கர வாகன விற்பனையும் 16.8 சதவிகிதமும், மோட்டார் சைக்கிள் விற்பனையும் 19 சதவிகிதமும் ஸ்கூட்டர் விற்பனை 12 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்தும் காணப்படுகிறது.
பயணிகள் வாகன விற்பனை வெகுவாக வீழ்ச்சி!
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 2019ம் ஆண்டு வரையில், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனையானது 14 சதவிகிதம் குறைந்து, 7,910,554 ஆக குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வாகன விற்பனையானது, 21.56 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 9,13,410 ஆக குறைந்துள்ளது. இதுவே வர்த்தக வாகன விற்பனை 13.57 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 2,65,164 வாகனங்களாக குறைந்துள்ளது. இதுவே இரண்டு சக்கர வாகன விற்பனையானது 13 சதவிகிதம் குறைத்து, 6,525,763 ஆக குறைந்துள்ளது.
பல லட்சம் வேலைகள் காலியாகலாம்!
ஒட்டு மொத்த பொருளாதாரமும் மந்த நிலையில் இருப்பதும், வாடிக்கையாளர்கள் செண்டிமென்டும் சாதகமான மனநிலையில் இல்லாததால், கடந்த 18 மாதங்களில் மட்டும், இது வரை 280 டீலர்ஷிப்கள் மூடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிபுனர்கள், ஆட்டோமொபைல் துறையில், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில மாதங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜி.டிபியில் முக்கிய பங்கு
மொத்தத்தில் இந்தியாவில் 119 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் துறை, 37 மில்லியன் மக்களை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஆதரித்து வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 49 சதவிகிதம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்படும் ஒட்டுமொத்த வீழ்ச்சியானது, ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications