டெல்லி: ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இதற்கு விதி விலக்கல்ல என்பதற்கு ஏற்ப, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கடந்த ஜூலை மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆமாங்க.. முன்னணி இந்திய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில், அதன் சர்வதேச அளவிலான, ஒட்டுமொத்த விற்பனை (global wholesales ), கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாகவும், குறிப்பாக 14 சதவிகிதம் குறைந்து, 78,000 யூனிட்களாக குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்கள் மொத்த விற்பனை 41,783 ஆகவும், இதே செர்ரி ஜாகுவார் லேண்ட் ரோவர் (Chery Jaguar Land Rover) கார்கள் 4,013 ஆகவும் உள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு கொடுத்துள்ள அறிக்கையில், கடந்த மாதத்தில், ஜாகுவார் மொத்த விற்பனை 12,308 யூனிட்கள் எனவும், இதே லேண்ட் ரோவர் 29,475 வாகனங்கள் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் உலகளவிலான மொத்த பயணிகள் விற்பனையானது, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஜூலை மாதத்தில் 4 சதவிகிதம் அதிகரித்து, 52,432 வாகனங்களாக விற்பனையாகியுள்ளது.
எப்படி இருப்பினும் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த வணிக வாகன விற்பனையும், கடந்த ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடும்போது, 35 சதவிகிதம் குறைந்து, 26,268 ஆக குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில், உள்நாட்டு சில்லறை விற்பனையும் 34 சதவிகிதம் குறைந்து, 32,938 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஜூலை 2018ல் 50,100 யூனிட்களாக விற்பனை இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 23 சதவிகிதம் குறைந்து, 1,64,817 ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,14,679 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது 0.82 சதவிகிதம் குறைந்து, 121 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications