மும்பை, இந்தியா: கடந்த பல மாதங்களாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையிலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் துறையிலும் ஒரு பலத்த நுகர்வுச் சரிவு இருந்து வருகிறது.
இப்போது அந்த நுகர்வுச் சரிவு fast-moving consumer goods (FMCG) என்று சொல்லப்படும் அதிவேக நுகர்வுப் பொருட்களிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பேஸ்ட், பல் பொடி, சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் தொடங்கி இரவு உறங்கச் சொல்லும் முன் கொளுத்தி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்தும் இந்த அதிவேக நுகர்வுப் பொருளில் வரும்.
FMCG நிறுவனங்கள்
ஆட்டோமொபைல் துறை சந்தித்துக் கொண்டிருக்கும் பெரிய நுகர்வுச் சரிவை இந்த fast-moving consumer goods (FMCG) நிறுவனங்களும் சந்தித்துக் கொண்டிருப்பதை ஒருமித்த குரலில் ஒப்புக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் கிராம புறங்களில் இந்த நுகர்வுச் சரிவு மிகவும் அதிகமாக இருக்கிறதாம். அதிலும் வட இந்தியப் பகுதிகளில் மிக அதிகமாக இந்த நுகர்வுச் சரிவு இருக்கிறதாம்.
காரணம்
இந்தியாவின் நகர் புறங்கள் மற்றும் கிராம புறங்களில், கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சம்பளங்கள் அதிகரிக்காதது, பருவ மழைப் பிரச்னை போல விவசாயத் துறையில் இருக்கும் சிக்கல்கள், பொதுவாக இந்தியாவில் நிலவும் கடன் சிக்கல் போன்ற காரணங்களால் இந்த நுகர்வுச் சரிவு தொடர்ந்து கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு இந்த நுகர்வுச் சரிவுக்குப் பின், இந்திய கிராம புறங்களில் மக்களின் சேமிப்பும் குறைந்திருக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்துஸ்தான் யுனிலிவர்
இந்திய fast-moving consumer goods (FMCG) நிறுவனங்களில் கடந்த ஒரு வருட காலமாக விற்பனையாகும் பொருட்களின் எண்ணிக்கை சரிந்து வருவதை பார்க்க முடிகிறதாம். அதற்கு இந்தியாவின் மிகப் பெரிய fast-moving consumer goods (FMCG) நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலிவரின் விற்பனை எண்ணிக்கை ஒரு சாட்சி. ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் விற்பனை வால்யூம்கள் கடந்த ஜூன் 2018 காலாண்டை விட, ஜூன் 2019 காலாண்டில் 7 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம்.
டாபரிலும் இதே தான்
அதே போல இந்தியாவின் இரண்டாவது பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவிலும் இதே நிலை தானாம். தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி, ஏர் ஃப்ரெஷ்னர், பேஸ்ட், பழச் சாறுகள், மருந்துகள், குளூக்கோஸ், தேன் என பல பொருட்களை விற்கும் டாபர் இந்தியா நிறுவனத்திலும் இதே கதை தானாம். டாபர் இந்தியா நிறுவனத்தின் கடந்த ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல் 15 சதவிகிதம் விற்பனை வால்யூம்களின் எண்ணிக்கை சரிந்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications