குருகிராம், ஹரியானா: கார்ஸ் 24 நிறுவனம் நம் கிரிக்கெட் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) உடன் ஒரு டீல் போட்டிருக்கிறார்களாம்.
அந்த டீலின் படி, நம் தல Mahendra Singh Dhoni கார்ஸ் 24 நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்படுவார். இதில் என்ன பெரிய விஷயம் எனக் கேட்கிறீர்களா..?
அங்கு தான் ட்விஸ்டே..! வழக்கமாக இப்படி ஒரு நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக செயல்படுபவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் தானே..? ஆனால் Mahendra Singh Dhoni பணம் வாங்கவில்லை.
பங்குகள்
கார்ஸ் 24 நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்படும் Mahendra Singh Dhoni பணத்துக்கு பதிலாக, கார்ஸ் 24 நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளப் போகிறாராம். ஆக நம் தல Mahendra Singh Dhoni கூட இனி கார்ஸ் 24 நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளை வைத்திருக்கும் பிசினஸ் மேன் என்பதை இனியும் சொல்ல வேண்டுமா என்ன..? Mahendra Singh Dhoni-யை விளம்பரத் தூதராக நியமித்ததைக் கூட, ஒரு பெரிய முதலீடாகக் கருதுகிறது கார்ஸ் 24 நிறுவனம்.
கார்ஸ் 24
"கார்ஸ் 24 நிறுவனத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் Mahendra Singh Dhoni-யை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏகப்பட்ட, எண்ணில் அடங்காத இந்தியர்களுக்கு Mahendra Singh Dhoni ஒரு கதா நாயகனாக இருக்கிறார்" எனச் சொல்லி பெருமைபட்டிருக்கிறார் கார்ஸ் 24 (Cars 24) நிறுவனத்தின் இணை நிறுவனர் (Co Founder) மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி (சிஇஓ) விக்ரம் சோப்ரா. இதற்கு நம் தல Mahendra Singh Dhoni-யும் பதிலளிக்கும் விதத்தில் பேசி இருக்கிறார்.
குதூகலத்தில் தோனி
"நானும் கார்ஸ் 24 நிறுவனத்தின் ஒரு அங்கமாக பயணிக்க ஆவலாக இருக்கிறேன். கார்களின் காதலனாக இருக்கும் நான், இன்றைய தலைமுறைக்கான புதிய கம்பெனிகளுக்கும் ரசிகனாக இருக்கிறேன். இன்றைய கால புதிய கம்பெனிகள் எதிர் காலத்தை வடிவமைக்கிறார்கள், நிறைய கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய லட்சியங்கள் இருக்கின்றன. நான் அவர்களோடு வேலை செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் இலக்குகளை அடைய உதவுவதற்கு சந்தோஷப்படுகிறேன்" எனச் சொல்லி பாராட்டு மழையில் நனைந்திருக்கிறார் நம் Mahendra Singh Dhoni.
கார்ஸ் 24
கார்ஸ் 24 நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனையில் அமைதியாக ஒரு புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த கார்ஸ் 24 நிறுவனம் பிரான்சைஸ் வழியாக தங்கள் அவுட் லெட்களை இந்தியாவின் சிறு நகரங்களில் அதிகரித்துக் கொள்ள முடிவு செய்திருந்தது. இந்த பிரான்சைஸ் மாடலைப் பயன்படுத்தி தங்கள் அவுட் லெட் எண்ணிக்கையை சுமார் 300-க்கு மேல் கொண்டு செல்ல இருக்கிறார்களாம். இப்படிப்பட்ட நிறுவனத்தோடு தான் நம் தல Mahendra Singh Dhoni கை கோர்க்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications