டெல்லி : இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
இந்த நிலையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்ற பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.
மேலும் இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உள்கட்டமைப்பு துறையில் முதலீடு!
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்தே பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்கட்டமைப்புக்கு துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது இன்று 21ம் நூற்றாண்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சிறு குடும்ப கொள்கை நாட்டின் வளர்ச்சி
நாளுக்கு நாள் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்த மக்கள் தொகை அதிகரிப்புக்கு அடுத்த தலை முறையினருக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கும். இதனால் சிறு குடும்பம் கொள்கையை பின்பற்றுபவர்களும் நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்கிறார்கள். மேலும் இது தேசத்தின் வளர்ச்சியிலும் மிக பங்களிப்பு செய்யும். இதோடு மோடி அரசின் நோக்கமே, மக்கள் இங்கு நன்றாக இருக்க வேண்டும், எளிதில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்!
பிரதமர் தேசத்துக்கான தனது உரையில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை கூறியுள்ளார். அதோடு இந்தியா எப்படி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதியில் பங்களிக்க வேண்டும். அதற்கான ஏற்றுமதி வாய்ப்புகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிறைய இருக்கின்றன என்றும் மோடி கூறியுள்ளார்.
இலக்கை அடைந்து விடலாம்
நாட்டில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க வேண்டும். ஆக இந்தியர்கள் அனைவரும் 2022க்குள் ஒவ்வொருவரும் 15 இடங்களுக்காவது சுற்றுலா செல்லுங்கள், இது சுற்றுலா துறையை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர்கள் இலக்கு கடினமானதாக தோன்றலாம். ஆனால் 70 ஆண்டுகளில் அடைந்த 2 டிரில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதிலும் பாஜக) 1 டிரில்லியன் டாலரை அடைந்துள்ளோம். ஆக இந்த இலக்கு அடையக் கூடிய இலக்கு தான் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பொருளாதாரத்தையும் & எம்.எஸ்.எம்.இயை மேம்படுத்தும்
காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்தை ரத்து செய்துள்ள இந்த நிலையில், மேட் இன் இந்தியா தயாரிப்புகள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளை உட்கொள்வது, கிராமப்புற பொருளாதாரம் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்தும். ஆக மக்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நீர் பாதுகாப்புக்கு முன்னுரிமை
நீர் பாதுக்காப்பு திட்டம் அடிமட்டத்தில் இருந்தே துவங்க வேண்டும். இந்த வேலை வெறும் அரங்சாங்கத்தின் வேலையாக மட்டும் இருந்திட முடியாது. இந்த நிலையில் மக்களும் இதில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
use of single use plastic. வேண்டாம்
இந்தியாவில் use of single use plastic கைவிடும் நேரம் வந்து விட்டது. குடிமக்கள் கட்டாயம் இந்த ஒரு முறை உபயோகிக்கப்படும், இந்த பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்த நடவடிக்கைகளுக்காக அணிகள் திரட்டப்படலாம் என்றும், அடுத்த அக்டோபர் 2ம் தேதி இது குறித்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தனது உரையில் கூறியுள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications