டெல்லி : ஆயில் அண்ட் கேஸ் கார்ப்பரேஷன் (Oil and Natural Gas Corp) 25 க்கும் மேற்பட்ட பல திட்டங்களில், 83,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆமாங்கா.. எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தியை அதிகரிக்க இந்த நிறுவனம் இந்த முதலீட்டை செய்ய உள்ளதாகவும், இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய நிர்வாக இயக்குனர், மேல் குறிப்பிட்ட திட்டங்களில், பதினைந்து திட்டங்கள் தற்போது செயலாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் 180 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நிறுவனம் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 24.23 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி இருந்தது என்றும், இதுவே கேஸ் உற்பத்தி 25.81 பில்லியன் கியூபிக் மீட்டராகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார். இதுவே மற்றொரு பிரிவில் 10.1 மில்லியன் டன் எண்ணெய்யும் மற்றும் 4.736 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் அடுத்த 2024 நிதியாண்டுக்குள் இயற்கை எரிவாயு உற்பத்தி, 32 பில்லியன் கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் 38 இடங்களில் 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணியாற்றுவதாக கூறுகின்றனர்.
ஓ.என்..ஜி.சியின் வணிக செயல் திறன் குறித்து பேசியவர், கடந்த 2018 - 2019ம் ஆண்டில் இந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 1,09,655 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட29 சதவிகிதம் அதிகமாகும்.
இதுவே கடந்த முதல் காலாண்டில் நிகரலாபம் 34 சதவிகிதம் அதிகரித்து, 26,716 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் வெளி நாட்டு முதலீட்டு பிரிவான ONGC Videsh Ltd கடந்த 2019ம் நிதியாண்டில், 18.83 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உள் நாட்டில் 38 இடங்களிலும், இது சர்வதேச அளவில் 21 நாடுகளில், 40 இடங்களிலும் இந்த நிறுவனம் தனது உற்பத்தியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications