இந்தியாவின் விடுதி வர்த்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஒரு நிறுவனம் OYO, நாட்டின் ஏற்பட்ட ஆன்லைன் வர்த்தகப் புரட்சியில் OYO நிறுவனத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நாட்டில் இருக்கும் 80 சதவீத விடுதி அதாவது ஹோட்டல்களை இணைத்து ஆன்லைன் புக்கிங் சேவைக்குக் கொண்டு வந்தது OYO.
இந்தியாவைத் தாண்டி மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைக் கொண்டுள்ள சீனாவில் OYO தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
இந்நிலையில் OYO தனது வர்த்தகத்தை விடுதி பிரிவை தாண்டி உணவு துறைக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டது, இதற்காகச் சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் சோமேட்டோ உடன் இணைந்து கிளவுட் கிச்சன் என்ற சோதனை திட்டத்தைச் செயல்படுத்தியது.
இத்திட்டத்தின் வாயிலாகச் சோமேட்டோ தளத்தில் Adraq மற்றும் O'Biryani என்ற இரு சலுகையை நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்தது.
காஃபி ஷாப் வர்த்தகம்
இதனிடையில் தற்போது காஃபி ஷாப் வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது. The French Press என்ற பெயரில் டெல்லி மற்றும் பெங்களூரில் புதிய கடைகளை அடித்த சில வாரங்களில் திறக்க உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தனது துவங்க உள்ளது.
பிரான்சைஸ் மாடல்
OYO தனது புதிய காஃபி ஷாப் வர்த்தகத்தைப் பிரான்சைஸ் மாடலில் விரிவாக்கம் செய்யவும், முன்னணி காஃபி ஷாப் நிறுவனத்துடன் கூட்டணி வைக்கவும் முடிவு செய்து. யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்று கூறவில்லை என்றாலும், சிசிடி சரிவை நோக்கிச் சென்று இருக்கும் இந்த நேரத்தில் OYO-வின் இந்த முயற்சி பெரிய வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.
25 சதவீத வருமானம்
இதன் மூலம் ஹோட்டல் துறையில் மட்டும் இருந்த OYO தற்போது உணவு துறையிலும் நுழைந்துள்ளது. இதன் மூலம் தனது 25 சதவீத வருவாயை இத்துறை வர்த்தகத்திலிருந்து பெறத் திட்டமிட்டுள்ளது OYO.
இந்தியாவில் இத்திட்டம் வெற்றிபெற்றால் இதைச் சீனாவிற்குக் கொண்டு செல்லவும் OYO முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications