தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய வாழ்க்கை முறையில் பல முதலீட்டுத் திட்டங்கள் உருவாகி வருகிறது, அதில் மிக முக்கியமான ஒன்று கிரிப்டோகரன்சி. வயது வித்தியாசம் இல்லாமல் படித்துப் பட்டம் பெற்ற பல கோடி மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.
ஆனால் உலகம் முழுவதிலும் இதற்குத் தடை விதிக்கும் நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யில் முதலீடு செய்யத் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் இதைச் செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரம் இல்லையாம்.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு, நிதி நிறுவனங்களும் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்ய எவ்விதமான உதவியும், சேவையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் இதைச் செய்ய ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை என IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரம் இல்லை
கிரிப்டோகரன்சி வர்த்தகத் தடை மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு இந்தியாவில் கிரிப்டோகரன்சி குறித்து ஒரு முறையான சட்ட விதிகள் இல்லாத போது ரிசர்வ் வங்கி இதன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்க அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
IAMAI அமைப்பு
வங்கி ஒழுங்குமுறை விதிகளைத் தாண்டி ரிசர்வ் வங்கி செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ கூடாது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்தத் தடை தனியார் நிறுவனங்களுக்கு எதிரானது என IAMAI அமைப்பின் தலைவர் அசிம் சூத் தெரிவித்துள்ளார்.
புரிதல்
இதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி இத்துறை வர்த்தகம் குறித்து எவ்விதமான புரிதலும் ஆலோசனையும் இல்லாமல் தான் இந்தத் தடையை விதித்துள்ளது எனவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள்
இதேபோல் விர்ச்சுவல் சந்தையில் பல விதமான கிரிப்டோகரன்சி, பல விதமான வர்த்தகம் உள்ளது, ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவு பொதுவாக விதிக்கப்பட்டு உள்ளதால் பல தனியார் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அறிவித்துள்ளது எனவும் அசிம் சூத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications