சென்னை, தமிழ் நாடு: Bigg Boss 3 Tamil-க்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. ஸ்டார் விஜய் சேனலில் பெரிய அளவிலான மக்களால் பார்க்கப்படும் ஒரு டிவி ஷோ.
எப்போது இணையத்தைத் தொட்டாலும் லாஸ்லியா, கவின், ஷெரின் என Bigg Boss 3 Tamil போட்டியாளர்களைப் பற்றிய பதிவுகள், செய்திகள் நம் கண்ணில் பட்ட வண்ணமே இருக்கின்றன.
Bigg Boss என்கிற நிகழ்ச்சியினால் மட்டும் ஸ்டார் விஜய் General Entertainment Channel (GEC) என்று சொல்லப்படும், பொது பொழுதுபோக்கு சேனல்களில் ஒரு முக்கிய இடம் பிடித்து இருக்கிறதாம்.
பார்வையாளர்கள்
Broadcast Audience Research Council (BARC)-ன் கணக்குப் படி Bigg Boss 3 Tamil நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை சராசரியாக 50 லட்சம் பேர் பார்க்கிறார்களாம். இது கடந்த 41 எபிசோட்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த கணக்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே எடுத்த கணக்காம்.
அதிகரிப்பு
தமிழ் திரை உலகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். Bigg Boss 3 Tamil கடந்த ஜூன் 23, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஜூன் 23, 2019-க்கு முன்பான நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த பார்வையாளர்களை விட, Bigg Boss 3 Tamil தொடங்கப்பட்ட எபிசோட் அன்று சுமாராக 73 சதவிகித பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதாம்.
சராசரி எவ்வளவு
Bigg Boss 2 Tamil நிகழ்ச்சியை ஒரு எபிசோடுக்கு சராசரியாக 35 லட்சம் பார்வையாளர்கள் பார்த்தார்களாம். ஆனால் Bigg Boss 1 Tamil நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை சராசரியாக 51 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்களாம். இப்போது மீண்டும் Bigg Boss 3 Tamil நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை சராசரியாக 50 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் 41 எபிசோட்கள் தான் கணக்கு எடுத்திருக்கிறார்கள்.
ஸ்டார் விஜய் தரப்பு
கடந்த இரண்டு Bigg Boss Tamil சீசன்களும் வெற்றிகரமாக ஓடியது. இந்த Bigg Boss 3 Tamil சீசனுக்கு இதுவரை நல்ல வரவேற்பு இருக்கிறது. வாரக் கடைசி நாட்கள் அல்லது வார நாட்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லா நாட்களிலும் பார்வையாளர்கள் Bigg Boss 3 Tamil நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். இது எங்களை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது என்கிறார் ஸ்டார் விஜய் நிறுவனத்தின் வியாபாரப் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி.
வருமானம்
சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் Bigg Boss Tamil தொடங்கப்பட்டு சில வாரங்களிலேயே இந்த ஷோ மூலம் சுமார் 1,250 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். காரணம் Bigg Boss Tamil நிகழ்ச்சிக்கு மத்தியில் 30 நொடி விளம்பத்துக்கே சுமார் 25 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். ஆக ஒரு நாள் எபிசோட்க்கான வியாபாரம் நிமிடங்கள் 25. ஆக 25 * 50 = 1,250 கோடி ரூபாய் எனக் கணக்கு சொன்னார்கள்.
லாபம் மட்டும்
இதில் செலவுகள் சுமாராக 100 கோடி ரூபாய் போக லாபம் மட்டும் 1,150 கோடி வரும் என்றார்கள். அப்படி Bigg Boss 3 Tamil இந்த முறை லாபம் ஈட்டுமா..? எனக் கேட்டால், இதை விட அதிகம் ஈட்ட வாய்ப்பிருப்பதாகத் தான் தெரிகிறது என்கிறார்கள் பிக் பாஸ் ஆர்வலர்கள். காரணம் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு எபிசோடுக்கு சராசரியாக 50 லட்சத்தை மீண்டும் 41 எபிசோடுகளுக்குள்ளேயே தொட்டிருக்கிறதே என்கிறார்கள் Bigg Boss ரசிகர்கள். அவர்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினால் நமக்கு என்ன..? வாங்க நாம போய் லாஸ்லியா அக்காவ பாப்போம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications