Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா..? அப்படி ஒரு திட்டம் இருக்கா..?

Mutual funds: இன்றைய தேதிக்கும் நுகர்வுத் துறை ஒரு பெரிய துறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு ரிலையன்ஸ் ரீடெயில் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக் கடை தொடங்கி இருப்பதே சாட்சி. இந்தியாவைப் பொறுத்த வரை நுகர்வுக் கலாச்சாரம் பொருளாதாரத்தை பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

ஆக இந்தியாவின் நுகர்வுத் துறை சார் ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கிறதா..?

Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா..? அப்படி ஒரு திட்டம் இருக்கா..?

இருக்கிறதே. தீம் சார் மியூச்சுவல் ஃபண்டுகளில் நுகர்வு சார் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கின்றன.
செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, தீம் சார் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணம், அதன் தீம் சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் 80 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி தன் மொத்த நிதியில் (திரட்டிய நிதியில்) 80% வைத்திருந்தால் அது தீம் சார்ந்த திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளாகும்.

இவர்கள் தன் 80 சதவிகித நிதியை தங்கள் தீம் சாராத மற்ற ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய முடியாது. அதையும் மீறி செய்தால் அது செபி விதிமுறைகள் படி குற்றமாகும். எனவே நாம் நினைத்தது போல முழுக்க முழுக்க தங்களின் தீம் சார்ந்த நல்ல முதலீடுகளை தேர்வு செய்து நமக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் ரக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இந்த திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள்.

நுகர்வு சார் திமெட்டிக் ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்யும் திமெட்டிக் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆதித்யா பிர்லா சன் லைஃப் இந்தியா ஜென் நெக்ஸ் ஃபண்ட், கடந்த 5 ஆண்டில் 14.25 சதவிகிதம் வருமானம் கொடுத்திருக்கிறது.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மேலே சொன்ன நுகர்வு (Consumption) தீம் சார் திமெட்டிக் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டில் தீம் சார் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானம்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Aditya Birla Sun Life India GenNext Fund | Invest OnlineEQ-ConsumptionAug-200514.251,066
Canara Robeco Consumer Trends Fund - Regular Plan | Invest OnlineEQ-ConsumptionSep-200913.48319
Sundaram Rural and Consumption Fund - Regular PlanEQ-ConsumptionMay-200612.092,067
Mirae Asset Great Consumer Fund - Regular Plan | Invest OnlineEQ-ConsumptionMar-201112.06766
SBI Consumption Opportunities Fund | Invest OnlineEQ-ConsumptionJul-199910.73652
Reliance ETF Consumption | Invest OnlineEQ-ConsumptionApr-20149.7111
Quant Consumption FundEQ-ConsumptionOct-20088.540.72
Reliance Consumption Fund | Invest OnlineEQ-ConsumptionSep-20046.4475
UTI India Consumer Fund - Regular Plan | Invest OnlineEQ-ConsumptionJul-20075.39239

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+