இனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும், தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுக்கும் 370 பிரிவை ரத்து செய்ததிலிருந்து, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அதிரடியாக பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அதிரடியான முடிவை எடுத்திருந்தது.

இனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை!

இந்த நிலையில் பாகிஸ்தானின் எலக்டிரானிக் மீடியாக்களில், இந்திய நடிகர்கள் நடித்த விளம்பரங்களுக்கு தடை செய்துள்ளதாக, பாகிஸ்தான் மின்னணு ஊடக கண்கானிப்புத் குழு (பெர்மா) தடை விதித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய சேனல்கள் மற்றும் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்கான அனுமதியை ஏற்கனவே வாபஸ் பெற்றதாக பெம்ரா கூறியுள்ளது.

அடிசக்க 4 மடங்கு லாபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. அனில் அம்பானி மகிழ்ச்சி..! அடிசக்க 4 மடங்கு லாபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. அனில் அம்பானி மகிழ்ச்சி..!

தற்போது டெட்டால் சோப், சர்ஃப் எக்சல் பவுடர், பாண்டீன் ஷாம்பு, ஹெட் & ஷோல்டர் ஷாம்பு, லைஃப்பாய் ஷாம்பு, ஃபாக்கி பாடி ஷாம்பு, சன்சில்க் ஷாம்பு, நூர் நூடுல்ஸ், சஃபி, பேர் & லவ்லி பேஸ் வாஷ், சேஃப்கார்டு சோப் உள்ளிட்ட விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளனவாம். அதோடு இந்த விளம்பரங்களில் உள்ள விளம்பரதாரர்களை மாற்ற வேண்டும். மீறி ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

மேலும் இந்த விளம்பரங்களில் உள்ள கேரக்டர்களை மாற்றுவதன் மூலம் இந்த விளம்பரங்களை இயக்கி கொள்ளலாம் என்றும் பாகிஸ்தாம் ஊடக அமைப்பு பெர்மா கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை நீக்கியதிலிருந்தே, பாகிஸ்தான் தொடர்ந்து தனது எதிப்புகளை காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்தியா எந்த நிலையில் இந்த ரத்தை திரும்ப பெற முடியாது என்றும் கூறி வருகிறது. மேலும் பாகிதானிடனும் இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும்படியாக வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று பிரதமர் மோடி, சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது பல அம்சங்களை பற்றி பேசினார். எனினும் பாகிஸ்தான் பற்றியோ அல்லது அந்த பிரச்சனைகளை பற்றியோ எதுவும் பேச வில்லை. மாறாக காஷ்மீரில் பொருளாதாரத்தை மேம்படுத்த பல வகையான திட்டங்களை கொண்டு வரபோவதாகவும், குறிப்பாக போக்குவரத்து வசதியினை மேம்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan's electronic media has banned the advertisement of Indian artists

Pakistan's electronic media has banned the advertisement of Indian artists
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X