எல்லோரும் ஊர் சுத்துங்க.. மோடியின் கலக்கலான ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சுமார் 2 கோடி பேர் சுற்றுலாவுக்காகச் செல்கிறார்கள். இது மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் எந சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் பேசினார்.

 

அதற்கு மாற்று விழியையும் மோடி கூறினார்.

 15 இடங்கள்

15 இடங்கள்

வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்வதை விட இந்தியாவில் அடுத்த 3 வருடத்தில் 15 இடங்களுக்குச் சுற்றுலா செல்லுங்கள் இந்திய சுற்றுலாத் துறை தலைகீழாக மாறி வளர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுவிடும்.

இதுமட்டும் அல்லாமல் இந்திய மக்களின் சுற்றுலா எண்ணிக்கை அதிகமாகும் போது வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

சிறந்த சேவை

சிறந்த சேவை

அப்படி நீங்கள் செல்லும் சில இடங்களில் சிறந்த சேவைகளைக் கொண்ட ஹோட்டல்களும் இருக்காது ஆனாலும் நீங்கள் செல்ல துவங்கினால் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடையத் துவங்கும்.

அப்படிச் செய்யும் போது அது வெறும் சுற்றுலாவாக மட்டும் இருக்காது நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு முக்கியப் பணியை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என மோடி தெரிவித்துள்ளார்.

10 இடங்கள்
 

10 இடங்கள்

இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் குறைந்தது 10 இடங்கள் உலகத் தர சுற்றுலா தளமாக மாறும் வாய்ப்புகள் உருவாகும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் இந்தியாவில் புதிதாக 17 சுற்றுலா தளங்களை உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

ஐநா உலகச் சுற்றுலா அமைப்பின் ஆய்வுகளின் படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50 கோடி இந்தியர்கள் வெளிநாட்டுச் சுற்றுலா செல்வார்கள் எனத் தெரிவித்துள்ளது. இது 2017இல் 2.3 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைக் கருத்தில் கொண்டு தான் மோடி இதைக் கூறியுள்ளார்.

சாலை திட்டம்

சாலை திட்டம்

சமீபத்தில் இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகளவிலான சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வாகன போக்குவரத்தில் மாபெரும் புரட்சியை மோடி அரசு செய்தது. தென் இந்தியாவில் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட போக்குவரத்துப் புரட்சி இப்போது தான் வட இந்தியாவில் ஏற்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தால் பல மாநிலங்களில் பயண நேரம் பாதியாகக் குறைந்துள்ளதாகவும், அதிகச் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் வடகிழக்கு மாநில மக்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi urges people to visit 15 domestic tourist destinations by 2022

With 20-million-odd Indian tourists travelling abroad on vacation every year, Prime Minister Narendra Modi on Thursday urged them to visit 15 tourist destinations within the country by 2022 to give a fillip to the domestic tourism sector. Addressing the nation from the ramparts of the Red Fort on the 73rd Independence Day, Modi said India has much to offer and if domestic tourism increases, international footfalls too will increase.
Story first published: Friday, August 16, 2019, 7:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X