மும்பை, இந்தியா: இந்தியாவின் முது பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து தொடங்கிய நிறுவனம் தான் visatara.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் TATA visatara நிறுவனத்தின் நட்டம் 831 கோடி ரூபாயாக எகிறி இருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் TATA visatara நிறுவனத்தின் நட்டம் 431 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நட்டத்துக்கு இந்தியாவில் ஏர்லைன்ஸ் துறை வியாபாரத்தில் நிலவும் கடினமான சூழல் தான் முக்கிய காரணம் எனச் சொல்கிறார்கள். அதோடு மற்ற விமான சேவை நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குவதையும் பார்க்க முடிகிறது.

TATA visatara நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் தன்னுடைய நிதி நிலைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என நம்புகிறார்களாம். அதற்கு காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் மூடப்பட்டு இருப்பதால், ஜெட் ஏர்வேஸின் வியாபாரம் வழியாக தங்கள் நிதி நிலை மேம்படும் என எதிர்பார்க்கிறார்கள்.
நிறுவனத்தின் லாப நட்டங்களை விளக்கும் டாடா குழுமத்தின் 2018 - 19 நிதி ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் TATA Visatara நிறுவனம் எவ்வளவு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது, எவ்வளவு செலவானது என்கிற விவரங்களைக் கொடுக்கவே இல்லையாம். ஆனால் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் Visatara நிறுவனத்தின் செயல்பாடுகளும், வருவாயும் அதிகரித்திருக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
காரணம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் இரண்டு விமானங்களை கூடுதலாக களம் இறக்கி இருக்கிறார்களாம். Visatara நிறுவனம் மட்டும் சுமார் 50 லட்சம் பயணிகளுக்கு மேல் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் விமான சேவை வழங்கி இருக்கிறதாம். ஆகையால் எப்படியும் வருவாய் அதிகரித்திருக்கும் என்கிறார்கள்.
இருப்பினும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் அதிகரித்த நட்டத்துக்கு, கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந்தது போன்றவைகள் தான் முதல் காரணமாகச் சொல்கிறார்கள். இதனால் 2017 - 18 நிதி ஆண்டில் விமான எரிபொருளான ஏர் டர்பைன் ஃப்யூயலுக்கு செலவழித்ததை விட 23 சதவிகிதம் 2018 - 19 நிதி ஆண்டில் கூடுதலாக செலவழிக்க வேண்டி இருந்ததாகச் சொல்கிறார்கள். அதே காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சுமார் 8 சதவிகிதம் வரை சரிந்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications