இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று Maruti Suzuki. குறிப்பாக இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சுமாராக 50 சதவிகித கார்கள் Maruti Suzuki நிறுவனத்துடையது.
சமீபத்தில் Maruti Suzuki நிறுவனத்திலேயே கார்களின் விற்பனை சுமாராக கடந்த மாதங்களில் சுமாராக 30 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருப்பதாகச் செய்திகள் வந்தன.
அதனைத் தொடர்ந்து Maruti Suzuki நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள் எனவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
பதில்
இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில், சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த Maruti Suzuki இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா "Maruti Suzuki நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 3,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுவரை வேலை பறி போய் இருக்கிறது" என்கிற கசப்பான உண்மையை மக்கள் மத்தியில் போட்டு உடைத்து இருக்கிறார். அதோடு Maruti Suzuki நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கத் தான் இந்த நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் எனவும் சொல்லி இருக்கிறார்.
வழக்கம் தான்
மேலும் "பொதுவாக ஆட்டோமொபைல் துறையில், எப்போதுமே வேலை அதிகமாக இருக்கும் போது, கூடுதலாக ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு எடுப்பதும், தேவைகள் குறைந்து, சந்தை சுருங்கும் போது, வேலை குறையும். அந்த சமயங்களில், ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதும் வழக்கம் தான்" எனச் சொல்லி இருக்கிறார். ஆட்டோமொபைல் என்கிற ஒரு துறையைச் சார்ந்திருக்கும் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.
இத்தனை துறைகளா
ஆட்டோமொபைல் என்கிற ஒற்றைத் துறையின் விற்பனை, ஆட்டோமொபைல் சேவை தொடங்கி, வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் வழங்குவது, வாகனங்களுக்கான கடன் வியாபாரம், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் வியாபாரம், ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்குகளில் வேலை செய்பவர்கள், போக்குவரத்து துறையில் வேலை செய்பவர்கள் என ஆட்டோமொபைல் விற்பனை சரிவால் இவர்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார் Maruti Suzuki-ன் தலைவர்.
டிவிஎஸ் லூகாஸ்
Maruti Suzuki-ஐத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் தான் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் தன் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் செய்தி பொது வெளிக்கு வந்தது. ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகள் வேலையில்லா நாட்களாக அறிவித்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாக ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்த நிலையையே இவர்களும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் ஒரு சில பிரிவுகள் போக மற்ற அனைத்து பிரிவுகளும் இரண்டு நாட்கள் வேலையில்லாமல் மூடப்பட இருப்பதையும் அந்தக் கடிதத்திலேயே சொல்லி இருக்கிறார்கள் .
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications