டெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு பக்கம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இன்னொரு பக்கம் நம் அனில் அம்பானியின் சொத்து சரிந்து கொண்டே இருக்கிறது. அண்ணண் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தம்பி அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கூட தூரம் விலகிக் கொண்டே இருக்கிறார்.

அண்ணண் முகேஷ் அம்பானியின் நிறுவன பங்குகளின் விலை உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது, தம்பி அனில் அம்பானியின் நிறுவன பங்குகளின் விலை பலத்த சரிவைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் இதே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பிரச்னையால் தம்பி அனில் அம்பானி சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. அப்போது சரியான நேரத்தில் அண்ணண் முகேஷ் அம்பானியின் உதவியால் சிறை செல்லாமல் தப்பித்தார். சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விஷயத்துக்கு வருவோம்.
இப்போது மீண்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எண்டர்பிரைஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ரா இன்வெஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வைத்திருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 11.51 சதவிகித பங்குகளை (எண்ணிக்கையில் 31.82 கோடி பங்குகள்) ஆக்ஸிஸ் ட்ரஸ்டி சர்வீசஸிடம் அடமானம் வைத்து இருக்கிறார்களாம்.
இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் எண்டர்பிரைஸ் நிறுவனம் 8.37 சதவிகித பங்குகளையும், ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ரா இன்வெஸ்ட் நிறுவனம் 3.13 சதவிகித பங்குகளையும் ஆக்ஸிஸ் ட்ரஸ்டீ சர்வீசஸ் நிறுவனத்திடம் அடமானம் வைத்திருக்கிறார்களாம். மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-க்கு கடந்த ஆகஸ்ட் 16, 2019 வெள்ளிக் கிழமை அன்று எழுதிய கடிதத்தில் இந்த விவரங்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications