எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத் : ஹைதராபாத்தை சேர்ந்த Obesh Komirisetty என்ற இளைஞர் ஒருவர், நள்ளிரவில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப உபர் டாக்ஸியில் பதிவு செய்ய முயற்சித்தபோது, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு 300 ரூபாய் என காட்டியுள்ளது.

இது மிகவும் அதிகமான தொகையாக இருக்கிறதே என யோசித்த இளைஞருக்கு அந்த சமயத்தில் மிக அற்புதமான யோசனைக் ஒன்று கிட்டியுள்ளது.

எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்!

மிக பசியுடன் இருந்த ஒபேஷ், தனது Zomato ஆப்பை திறந்து அருகில் எந்த ஹோட்டல் இருக்கிறது என்று பார்த்ததில் தோசை பந்தி என்ற கடை இருந்துள்ளது. அங்கிருந்தே தனது வீட்டிற்கு சோமேட்டோவில் ஒரு முட்டை தோசையை ஆர்டர் செய்துள்ளார்.

பின் அந்த ஹோட்டலுக்கு வெளியே காத்திருக்க ஆர்டரை எடுக்க சோமேட்டோ ஊழியர் வந்திருக்கிறார். பின் அவரிடம் நான் தான் ஆர்டர் செய்தேன். நீங்கள் செல்லவிருக்கும் இடம் என் வீடு தான். என்னையும் உங்களுடன் அழைத்துச் சென்று இறக்கிவிடுங்களேன் என ஆர்டரை எடுத்துக்கொண்டு சோமேட்டோ ஊழியருடன் இலவசமாக பயணித்து வீட்டிற்குச் சென்று இறங்கியுள்ளார்.

தற்போது கார் ரெய்டிற்கான 300 ரூபாயும் மிச்சம், தனது உணவையும் முடித்தாயிற்று. ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

அதோடு மட்டும் அல்ல, இவரை கூட்டிச் சென்ற Zomato ஊழியரோ, சார் 5 ஸ்டார் ரேட்டிங் போடுங்கள் என சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதற்கு இந்த இளைஞரும் சரி என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

பசியில் இருந்தவருக்கு உணவுக்கு உணவும் கிடைத்து விட்டது. காருக்கு செல்லும் செலவும் மிச்சம், ஒரே செலவில் இரண்டையும் செய்தாகி விட்டது. இதை அண்ணன் தற்போது இணைய தளங்களிலும் தனது செயலை பதிவிட்டுள்ளார். அது மட்டும் அல்லாது தன்னை ப்ரீயாக தனது வீட்டிற்கு கூட்டிச் சென்ற Zomatoவுக்கு நன்றி எனவும் தனது பேஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். இது மட்டும் அல்ல, இது நல்ல ஐடியாவா இருக்கே என்றும் கூறி வருகின்றனர். ஆமாங்கா.. Zomatoவிலேயே உணவை ஆர்டர் செய்துவிட்டு, பின்பு Zomato ஊழியருடனே அவர் வீட்டிற்கு செல்லும் இந்த யுக்தி உண்மையிலேயே ராக் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: zomato சோமேட்டோ
English summary

Hyderabad man impressed all after he uses Zomato to free ride

Hyderabad man impressed all after he uses Zomato to free ride
Story first published: Sunday, August 18, 2019, 19:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X