Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடன் பிரச்சனையால் ஒரு புறம் தனது விமான சேவையே நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மறுபுறம் போதிய நிதி இல்லாமல், ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் முழுவதும் விமான சேவையை நிறுத்தியது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தை ஏலத்தில் விட, எஸ்.பி.ஐ தலைமையிலான குழு, ஜெட் ஏர்வேஸ்சை மீட்கும் வகையில் எஸ்.பி.ஐ தலைமையிலான குழு இதற்குண்டான பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனினும் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க ஒரு சிலர் மட்டுமே ஆர்வம் தெரிவித்திருந்தனர். எனினும் அதுவும் சாதகமான நிலையில் இல்லாததால், இப்பிரச்சனை மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்?

அதிலும் 24,887 கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது 30,558 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

அதிலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் Eithad Airways நிறுவனம், இதுவரை பங்கு விற்பனை பற்றி எதுவும் கூறப்படாத நிலையில் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை இது வரை யாரும் வாங்க முன் வராத நிலையில், தற்போது இருவம் மட்டுமே Expression of Interest சமர்பித்துள்ளதாகவும், இதில் பனாமாவை சேர்ந்த Avantulo Group நிறுவனமும், Russian fund Treasury RA Creator நிறுவனமும் ஆர்வம் காட்டியுள்ளன. இதே நேரம் Anil Agarwal தலைமையிலான Volcan Investments நிறுவனம் நின்று போன இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதாகவும், பின்னர் 24 மணி நேரங்களுக்கு பிறகே இதை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பெறப்பட்ட ரூபாய் 26000 கோடி கடன் இருந்த நிலையில், தற்போது வட்டி அதிகரித்து, 30,558 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையையும் முற்றிலும் நிறுத்தியது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை இழந்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways as creditors' claims have now increase to Rs 30,558 crore

Jet Airways as creditors' claims have now increase to Rs 30,558 crores
Story first published: Sunday, August 18, 2019, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X