டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை கடந்த ஜூலை 2019-ல் முதல் இடம் பிடித்திருப்பதாக டிராய் அமைப்பு சொல்லி இருக்கிறது. ஜியோ நிறுவனத்தின் சராசரி இணைய டவுன்லோட் வேகம் 21 எம்பிபிஎஸ்-ஆக இருக்கிறதாம். 4ஜி சேவையில் அப்லோட் வேகத்தில் வொடாஃபோன் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறதாம்.

கடந்த ஜூன் 2019-ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைய வேகம் 17.6 எம் பி பி எஸ்-ஆக குறைந்தது. ஆனால் அடுத்த மாதமே தன் நெட்வொர்க் கவரேஜ்களின் தரத்தை மேம்படுத்தி ஜூலை 2019-ல் 21 எம் பி பி எஸ் வேகத்துக்கு கொண்டு வந்து இருக்கிறது ஜியோ.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பு வெளியிட்ட இணைய வேகப் பட்டியலில், ஏர்டெல் நிறுவனத்தின் இணைய டவுன்லோட் வேகம் 8.8 எம் பி பி எஸ் ஆகவும், வோடாஃபோன் நிறுவனத்தின் இணைய டவுன்லோட் வேகம் 7.7 எம் பி பி எஸ் ஆகவும், ஐடியா செல்லூலர் நிறுவனத்தின் இணைய டவுன்லோட் வேகம் 6.6 எம் பி பி எஸ் ஆகவும் இருக்கிறதாம்.
4ஜி நெட்வொர்க்கில், இணைய அப்லோட் வேகத்தில் வொடாஃபோன் நிறுவனம் 5.8 எம் பி பிஎஸ் உடன் முதலிடத்தில் இருக்கிறதாம். அதற்கு அடுத்து ஐடியா செல்லூலர் நிறுவனம் 5.3 எம் பி பி எஸ் அப்லோட் வேகத்துடன் இரண்டாவது இடத்திலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அப்லோட் வேகம் 4.3 எம் பி பிஎஸ் உடன் மூன்றாவது இடத்திலும், 3.2 எம் பி பி எஸ் வேகத்துடன் ஏர்டெல் நான்காவது இடத்திலும் இருக்கிறதாம்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி எஸ் என் எல்) நிறுவனம் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை நெட்வொர்க்குகளில் அதிவேகமானதாக இருக்கிறதாம். பி எஸ் என் எல் நிறுவனத்தின் 3ஜி இணைய டவுன்லோட் வேகம் 2.5 எம் பி பி எஸ் ஆகவும், ஐடியா நிறுவனத்தின் இணைய டவுன்லோட் வேகம் 2.0 எம் பி பி எஸ் ஆகவும், வொடாஃபோன் நிறுவனத்தின் இணைய டவுன்லோட் வேகம் 1.9 எம் பி பி எஸ் ஆகவும், ஏர்டெல் நிறுவனத்தின் இணைய டவுன்லோட் வேகம் 1.4 எம் பி பி எஸ் ஆகவும் இருப்பதாகச் சொல்கிறது டிராய்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications