படு வீழ்ச்சி கண்ட ஆட்டோமொபைல் துறை.. அதள பாதாளம் நோக்கி சென்ற பங்குகள்.. கதறும் முதலீட்டாளர்கள்!

டெல்லி : படு வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட விற்பனை சரிவால், படும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்த நிலையில் இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 55 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன.

குறிப்பாக கடந்த ஜூலை 2018லிருந்தே விற்பனை மெதுவாக சரிய தொடங்கியது. இந்த நிலையில் இந்த நிறுவனங்களின் பங்குகளும் பாதாளத்தை நோக்கி பாயத் தொடங்கி விட்டன.

சர்வதேச அளவில் மிகப்பெரிய நான்காவது சந்தையான இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி, சந்தையில் இதன் எதிரொலியைக் காண முடிகிறது.

பயணிகள் வாகன விற்பனை சரிவு

பயணிகள் வாகன விற்பனை சரிவு

குறிப்பாக கடந்த ஜூலை 2018லிருந்து, நடப்பு ஆண்டு ஜூலை 2019 வரையிலான ஒரு வருட காலத்தில், பயணிகள் வாகன விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. குறிப்பாக இந்த சமயத்தில் கார் விற்பனையாளர்களுக்கான, பயணிகள் வாகன விற்பனை 30.9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 2,00,790 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது கவனிக்கதக்கது. இந்த வீழ்ச்சியானது நுகர்வோரிடம் இருந்து தொடர்ந்து தேவை குறைந்து வருவதையே சுட்டிக் காட்டுகிறது.

விற்பனை படு வீழ்ச்சி

விற்பனை படு வீழ்ச்சி

சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (SIAM) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் 2000 முதல், தற்போது வரை மொத்த வாகன விற்பனை 35.22 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு காணப்படுவதாகவும் SIAM கூறியுள்ளது. இதே வர்த்தக வாகன விற்பனையானது 25.7 சதவிகிதம் குறைந்து, 56,866 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாகவும், இதுவே மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை 16.8 சதவிகிதம் குறைந்து, 1.51 மில்லியன் வாகனங்களாகவும், பயணிகள் கார்கள் விற்பனை 36 சதவிகிதம் குறைந்து, 1,22,956 வாகனங்களாகவும் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாகவிம் சியாம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

மேலும் சியாம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இதே மாதத்தில் உள்நாட்டு வாகன உற்பத்தியும் வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நுகர்வோர் தேவையும், இத்துறையில் நிலவி வரும் மந்த நிலையையுமே காட்டுகிறது என்றும் கூறியுள்ளது. இந்த வீழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாகவே S&P BSE auto sector index கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் 55% வீழ்ச்சி

டாடா மோட்டார்ஸ் 55% வீழ்ச்சி

கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலையானது 55 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதே காலத்தில் NSE's Nifty Auto index 36.70 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதே ஒரு வருட காலத்தில், மற்ற ஆட்டோமொபைல் துறை பங்குகளான மாருதி சுசூகி 33 சதவிகிதம் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.

பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை மட்டும் 1% ஏற்றம்!

பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை மட்டும் 1% ஏற்றம்!

இதுவே மஹிந்திரா அன்ட் மஹிந்திரா பங்கின் விலை 46 சதவிகித வீழ்ச்சி கண்டும், அசோக் லைலேண்ட் 50.31 சதவிகித வீழ்ச்சியுடனும், ஹூரோ மோட்டோகார்ப் 19 சதவிகித வீழ்ச்சியுடனும், டி.வி.எஸ் மோட்டார் 31.21 சதவிகித வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது. எனினும் இந்த ஆட்டோமொபைல் துறையில் பஜாஜ் ஆட்டோ பங்கு மட்டும், விதி விலக்காக 1 சதவிகித ஏற்றத்துடனும் காணப்பட்டது.

ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகளும் வீழ்ச்சி

ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகளும் வீழ்ச்சி

இத்துறை மட்டும் அல்லாது, இத்துறை சார்ந்த பங்குகளும் படு வீழ்ச்சியுடனே காணப்படுகின்றன. குறிப்பாக கார்களுக்கு வயர் சேனல்கள், மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கண்ணாடி தயாரிப்பு, இது தவிர மற்ற பிளாஸ்டிக் உதிரி பாகங்கள் தயாரிக்கும் மதர்சன் சுமி நிறுவனம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதன் பங்கு விலையில் 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் மிண்டா இண்டஸ்‌ட்ரீஸ் நிறுவனம் 23 சதவிகித வீழ்ச்சியுடனும், பாஸ்க் 27.56 சதவிகித வீழ்ச்சியுடனும் காணப்பட்டதாக இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

முழு ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி

முழு ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி

மேலும் சியான்மின் கூற்றுப்படி, முழு வாகனத் துறையும் நீடித்த சரிவின் கீழ் உள்ள நிலையில், அனைத்து பிரிவிகளிலும் உள்ள வாகன விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில், மொத்த பயணிகள் வாகன விற்பனை, ஒட்டு மொத்த பொருளாதார மந்த நிலைக்கும் மத்தியில், தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக சரிந்து காணப்படுகிறது.

சில்லறை விற்பனையும் சரிவு’

சில்லறை விற்பனையும் சரிவு’

ஒட்டுமொத்த வாகன விற்பனையும் சரிந்துள்ள நிலையில், குறிப்பாக சில்லறை வாகன விற்பனையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஜூலை 2019ம் ஆண்டில், 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 16,54,535 வாகனங்களாக விற்பனையாகி உள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 17,59,219 வாகனங்களாக விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் பெடரேஷன் ஆப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் (FADA) கூறியுள்ளது.

ஷோரூம்கள் மூடப்பட்டது

ஷோரூம்கள் மூடப்பட்டது

மேலும் இந்த FADA அமைப்பு, ஆட்டோமொபைல் துறையில் உள்ள டீலர்ஷிப்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 32,000 பேர் தங்களது வேலையினை இழந்துள்ளதாகவும், 271 நகரங்களில் 286 ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இது தவிர நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்த 18 மாதங்களில் இது நடந்துள்ளதாகவும் FADA அறிக்கைகள் கூறியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+