டெல்லி : பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் " அனைவருக்கும் வீடு" திட்டம் அடுத்த 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகாரத்துறை அமைச்சர் இது குறித்து கூறுகையில், PMAY திட்டத்தின் கீழ் இதுவரை 24 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் 50 லட்சத்தை எட்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது 48 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. ஆனால் இது விரைவில் 75 லட்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2022ம், ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், ஏற்கனவே 84 லட்சம் வீடுகளுக்கு நாங்கள் அனுமதி கொடுத்துள்ளோம் என்றும், மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 1 கோடி வீடுகளுக்கும் அனுமதி கொடுக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன் என்றும் பூரி கூறியுள்ளார்.
இது தவிர மேலும் 12 லட்சம் வீடுகளுக்கு கோரிக்கை வந்துள்ளது என்று கூறியுள்ள ஹர்தீப் சிங், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே, அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த இலக்கை எட்ட உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் இந்த வீடுகள், விரைவில் கட்டி முடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நரேட்கோவாவின் 15வது மாநாட்டில் உரையாற்றிய பூரி, ரியல் எஸ்டேட் சம்பந்தாமான சட்டம், தற்போது உடைத்தெரியப்பட்டுள்ளது. ஆக இனி வீடு வாங்குபவர்கள் யாருடைய தயவிலும் இருக்க மாட்டார்கள் என்றும், இந்த திட்டத்தின் கீழ் அரசு 16 தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது தவிர அரசாங்கம் குளொபல் ஹவிசிங் டெக்னாலஜி சேலஞ்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகம் முழுவதிலும் இருந்து புதுமையான தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து, புதுமையை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பசுமையான மற்றும் பேரழிவைத் தடுக்கும் விதமாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் நடைபெற்று வரும் திட்டமிட்ட நகரமயமாக்கலின் முழு வரம்புடனும், நகர்புற வீட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் பூரி கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications