பொதுத்துறை வங்கிகள் இதுநாள் வரையில் தனியார் வங்கிகளுடன் பெரிய அளவில் போட்டிப்போடாமல் இருந்தது. தனியார் வங்கிகள் தற்போது பலவிதகமான பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகள் புதிய வர்த்தகங்களைத் தேடி களத்தில் இறங்கியுள்ளது.
இதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளின் 59 நிமிட கடன் தளத்தில் சில்லறை திட்டங்களையும் கொண்டு வர பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளது.
59 நிமிட கடன்
பொதுத் துறை வங்கிகளின் 59 நிமிட கடன் தளத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடம் அதாவது ஒரு மணிநேரத்திற்குக் குறைவான காலக்கட்டத்தில் 1 கோடி ரூபாய் வரையில் வர்த்தகக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் கொடுத்து வருகிறது.
பொதுத்துறை வங்கி
மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் கடன் அளவை 5 கோடி வரையில் உயர்த்தலாம் என ஆலோசனை செய்து இறுதிக்கட்ட முடிவை எடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறது.
ஹோம் லோன், கார் மற்றும் பைக் லோன்
இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் தற்போது இத்தளத்தின் கீழ் சில்லறை கடன் திட்டங்களான ஹோம் லோன், கார் மற்றும் பைக் லோன்களையும் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது பொதுத்துறை வங்கிகள்
5 பொதுத்துறை வங்கிகள்
ஏற்கனவே இத்தளத்தில் இருக்கும் 3 வங்கிகளுடன் சேர்ந்த்து பாங்க ஆப் இந்தியாவும் இணைந்து ஹோம் லோன் மற்றும் பைக் & கார் லோன் கொடுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இத்தளத்தில் சேர ஆலோசனை செய்து வருகிறது.
உந்து சக்தி
பொதுத்துறை வங்கிகளின் இந்த முடிவு நாட்டின் வர்த்தகச் சந்தையைத் தாண்டி துவண்டு கிடக்கும் ஆட்டோமொபைல் சந்தையை மேம்படுத்த பெரிய அளவில் உதவும்.
இத்திட்டத்தின் விரைவாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்தடுத்த காலாண்டுகளில் தொடர்ந்து அதிக வருமானம் மற்றும் லாபத்தைப் பெற முடியும். மேலும் இந்தத் திட்டம் தனியார் வங்கிகளுக்குப் பெரும் போட்டியாக விளங்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
Mybank
சீனாவிலும் இதேபோன்ற 1 மணிநேரத்தில் கடன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் சீனாவில் சிறு, குறு, மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை மத்தியில் பெரும் புரட்சியே வெடித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications