ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் துறைகளைப் போலவே இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு வர்த்தகச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அதிலும் ஜெட் ஏர்வேஸ் நிலை என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய மக்களைக் கவரவும், இந்திய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என நோக்கத்துடன் வெறும் 9 ரூபாய்க்கு விமானச் சேவையை அளிப்பதாக அறிவித்துள்ளது.
வியட்ஜெட்
வியட்நாம் நாட்டின் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான வியட்ஜெட் இந்தியாவில் தனது பயணிகள் விமானச் சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 6ஆம் தேதி முதல் சேவை துவங்க திட்டமிட்டுள்ள வியட்ஜெட் அதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
முக்கிய நகரங்கள்
Ho Chi Minh நகரத்தில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் அதாவது திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளிலும், சேவை அளிக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் ஹனாய் நகரத்தில் இருந்து டெல்லிக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் சேவை துவங்க உள்ளது.
9 ரூபாய்
வியட்ஜெட் அறிமுகச் சேவையாக 3 நாள் புக்கிங் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 20 முதல் 22 வரையிலான காலத்தில் சுமார் 8000 டிக்கெட்களை வெறும் 9 ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த 9 ரூபாயை தாண்டி வாட் வரி, விமான நிலைய கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் டிக்கெட் விலையில் சேர்க்கப்படும்.
இந்த டிக்கெட்களை வியட்ஜெட் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமும் புக் செய்யலாம்.
இண்டிகோ
வியட்நாம்- இந்தியா இடையிலான விமானச் சேவையை 2017லேயே அறிமுகம் செய்யத் திட்டமிட்டது வியட்ஜெட். ஆனால் பல்வேறு காரணத்திற்காக இது தடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாம் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ஏற்கனவே இண்டிகோ சேவை அளித்து வரும் காரணத்தால் வியட்ஜெட்-இன் அறிமுகம் இண்டிகோ நிறுவனத்திற்குப் பெரும் போட்டியாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications