டெல்லி : உணவு ஆன்லைன் டெலிவரி வர்த்தகத்தில் முன்னணி வகிக்கும் சோமேட்டோ நிறுவனம், உணவகங்களின் #லாக்அவுட் என்ற போராட்டத்தால் நிலைகுலைந்துள்ளது என்றே கூறலாம்.
ஏனெனில் உணவகங்களை நம்பித்தான் இந்த சோமேட்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களின் பொழப்பு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்த உணவு டெலிவரி நிறுவனங்களின் பிரச்சனையை தலை தூக்கியுள்ளது.
இந்த டெலிவரி நிறுவனங்களால் கொடுக்கப்படும் அதிகப்படியான தள்ளுபடியால், நிறுவனங்கள் தொடர் நஷ்டத்தினையே கண்டு வருகின்றன. இதனால் தி நேஷனல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் ஆப் இந்தியா (NRAI) வில் உள்ள 5 லட்சம் உணவகங்கள், 5 ஆன்லைன் உணவகங்களோடு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தியது.
உணவகங்களுடன் பேச்சு வார்த்தை
இந்த நிலையில் NRAIவின் தலைவர் ராகுல் சிங், நாங்கள் உணவை டெலிவரி செய்யும் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம், அவர்களிடம் எங்களது பிரச்சனைகளை கூறியுள்ளோம், எனினும் அவர்கள் அவர்களது கொள்கைகளை மறுசீரமைக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்றும், அதிகப்படியான தள்ளுபடிகளில் சீர்திருத்தம் விரைவில் திருதப்பட்ட அம்சங்களுடன் திரும்ப வருவார்கள் என்றும் கூறியிருந்தார்.
இணைந்து பணியாற்றலாம்
இதற்கு சோமேட்டோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தீபீந்தர் கோயலும், நாங்கள் தொழில் துறையுடன் இணைந்து பணியாற்றவும், சோமேட்டோ கோல்டில் மாற்றங்களை செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நாங்கல் சோமேட்டோ கோல்டில் மாற்றங்களை செய்ய தயாராக உள்ளோம். ஆனால் உணவகங்கள் லாக்அவுட் பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மாற்றங்கள் கொண்டு வரப்படும்
மேலும் கடந்த வாரம் தங்களது கோல்டு திட்டத்திலிருந்து வெளியேறிய உணவக பங்காளிகளையும் ஆகஸ்ட் 26க்கு முன்பாக கையெழுத்திடுமாறு கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் செப்டம்பர் 15க்கும் முன்னர் சோமேட்டோ மாற்றங்களை வெளியிடும் என்றும், இவை தற்போதுள்ள 1.1 மில்லியன் தங்க உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும், இந்த திட்டத்தில் தற்போதுள்ள கூட்டாளர் உறுப்பினர்களாக 6,500 உணவகங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்கள் பாதிப்பு
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியிலிருந்தே சில உணவகங்கள் லாக்அவுட் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன, இது NRAIயின் தலைமையில் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே என்.சி.ஆர், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா முழுவதிலும் உள்ள 2000 உணவகங்கள், தள்ளுபடி மற்றும் சலுகைகள், கூப்பன்களை வழங்கும் சோமேட்டோ மற்றும் டைன்அவுட், ஈஸிடின்னர், மேஜிக்பின் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் வழங்கும் சலுகையை நீக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது என்றும், மேலும் இது உணவு வணிகத்தை பாதிக்கிறது என்றும் NRAI கூறியுள்ளது.
கோல்டு உறுப்பினர்களுக்கு புதிய விதிகள்
இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் பிசியான மாலை வேலைகளில், பயனாளர்கள் 1+1 ஆஃபர்களை பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் 2+ 2 என்றும் பயன்படுத்துகின்றனர். இதை ஓரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை தடுக்க கோல்டு உறுப்பினர்களுக்கு இதை ஒரு முறை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்தும் படி அன்லாக் செய்யப்படுவார்கள் என்றும் கோயல் கூறியுள்ளார். மேலும் இது குறித்தான புதிய விதிகளை சோமேட்டோ வகுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
உணவகங்கள் தள்ளுபடியால் அதிருப்தி
மேலும் இந்த அதிரடி சலுகைகளால் இந்தியாவின் இளம் தலைமுறையிப்னர் இந்த கோல்டு திட்டத்தினை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில காலங்களாக உணவக உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே வரிச்சுமையால் மற்றும் மற்ற செலவினங்களால் தள்ளாடி வரும் உணவகங்களுக்கு, இந்த சலுகை மேலும் அதிருப்தியை கொடுத்துள்ளது என்றும் கோயல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications