டெல்லி : அமெரிக்காவைத் சேர்ந்த ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின், ஃப்யூச்சர் கூப்பன் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வாங்க போவதாக கூறப்படுகிறது.
ஆமாங்க.. கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் கூப்பன் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு வாங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த இரு நிறுவனங்களும் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், எனினும் நிதித் தொடர்பான எந்த பரிவர்த்தனை குறித்தும் இந்த ஒப்பந்தங்களில் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அமேசானின் இந்த முதலீடு மூலமாக, இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் மேலும் காலூன்ற தொடங்கி விட்டது என்றும் கூறலாம். ஏற்கனவே பல சில்லறை வியாபாரிகளுடன், சூப்பர் மார்கெட்களுடனும் தொடர்பில் இருக்கும் அமேசான், அதன் எதிர்கால நலனுக்கான தற்போதிலிருந்தே, இந்தியாவில் தனது நிலைப்பாட்டை வலுபடுத்திக் கொள்ள, வலுவாக காலூன்ற தொடங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே குமார் மங்கலம் தலைமையிலான, பிர்லா குழுமத்தின் பங்குகளை கடந்த ஆண்டு செப்டம்பரில் வாங்கியதன் மூலம், சுமார் 600 கடைகளை தற்போது நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகள் மூலம் இன்னும் ஆழமாக வேரூன்றி விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஃப்யூச்சர் குழுமம் சூப்பர் மார்கெட் பிரிவில், பிக் பஜார் மற்றும் பல சில்லறை விற்பனை பிரிவுகள், ஈஸி டே, ஹெரிடேஜ் ஃபிரஸ் பிராண்டுகள் உள்ளிட்ட கடைகளின் மூலம் மொத்தம் 1500 கடைகளையும், இது 400 நகரங்களிலும் வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 13.5 சதவிகிதம் அதிகரித்து, 5,149 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர லாபம் 11 சதவிகிதம் அதிகரித்து, 170 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் முதலீடுகள் அதிகரித்தாலும், இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உள்நாட்டு சில்லறை வர்த்தகம் இதனால் பாதிக்கப்படாமல் இருந்தால் சரியே.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications