வங்கிகள் மேற் கொண்டு கடன் கொடுக்க 70,000 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அரசு கொடுத்திருக்கிறதாம். இந்த பணம், கடன் தேவையான இருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கத் தயாராக இருக்கும் தனி நபர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், சிறு வர்த்தகர்கள் என பலருக்கும் கடன் கொடுக்க உதவும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஒரு பக்கம் வங்கி கடன் கொடுக்க தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டோம். ஆனால் வட்டி குறையவில்லை என்றால் யார் கடன் வாங்குவார்கள். ஆகையால் மத்திய ரிசர்வ் வங்கி குறைக்கும் வட்டி விகிதங்களை எம் சி எல் ஆர் வழியாக குறைத்து கடன் வாங்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது குறித்து வங்கிகளோடு இணைந்து பேசி இருக்கிறார்களாம்.

ஏற்கனவே வாங்கி இருந்த வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற தனி நபர் கடன்களுக்கு ரெப்போ ரேட் அடிப்படையில் வட்டியைக் குறைக்க்ப போகிறார்களாம். அதே போல வியாபாரிகளுக்கு தேவையான working capital கடன்களும் இனி கொஞ்சம் குறைந்த வட்டியில் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறார். இது குறித்தும் வங்கிகளோடு பேசி இருக்கிறார்களாம்.
மிக முக்கியமாக சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கடன்களை முழுமையாக செலுத்தி முடித்து 15 நாட்களுக்குள், சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து டாக்குமெண்ட்களும் கடன் வாங்கி இருந்த வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த விதி தற்போது பொதுத் துறை வங்கிகளுக்கு மட்டுமே கொண்டு வந்து இருக்கிறார்களாம்.
வங்கி சார்ந்த இந்த விஷயங்கள், நேரடியாக திங்கட்கிழமை சந்தையில் எதிரொலிக்கும் என முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். பொதுவாக வங்கித் துறை தான் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் அதிக வெயிட்டேஜ் இருக்கும் துறை என்பதால், சந்தை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம்.எது எப்படியோ சொன்ன படி இந்த மாற்றங்கள் எல்லாம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர்ந்தால் உண்மையாகவே மகிழ்ச்சி தானே..!


Click it and Unblock the Notifications