உலகம் முழுவதும்தான் பொருளாதார மந்த நிலை இருக்கிறது.. நிர்மலா சீதாராமன்

டெல்லி: இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் கூட பொருளாதார மந்த நிலை இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றிய முக்கிய அம்சங்கள் கூறப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும்தான் பொருளாதார மந்த நிலை இருக்கிறது.. நிர்மலா சீதாராமன்

அதிலும் பல பொருளாதார நிபுனர்களும், முன்னாள தலைவர்களும் பல விதமான எச்சரிக்கைகளை கொடுத்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்தான அறிக்கைகளும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிலும் அதள பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஆட்டோ மொபைல் துறையால் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடையே, தொடர்ந்து இருந்து வரும் நிலையில், இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இதே போல இந்திய பங்கு சந்தைகளில் இருந்து அதிகப்படியான அன்னிய முதலீடுகள் கடந்த சில மாதங்களாக வெளியேறிக் கொண்டிருக்கின்றது. இதனால் ஒரு புறம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி யடைந்து வருவதோடு, பங்கு சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகிறது.

இது தவிர நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி தற்போது வீழ்ச்சி யடைந்து காணப்படுவதால், அதனை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை புதுபிக்கவும், இது குறித்தான நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அன்னிய முதலீடுகளை அதிகரிக்க, இது குறித்த சலுகைகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளால் அதிகளவிலான முதலீடுகள் அதிகரித்தால் மட்டுமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், அதிகளவிலான வட்டி விகிதத்தை குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிதி ஆயோக் தலைவர் ராஜூவ் குமார் இது குறித்து, தனது சமூக வலைதளத்தில், அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகளை தைரியமாக எடுத்து வருகிறது. இதை நிறுத்தக் கூடாது. இதற்காக பீதி அடையவோ அல்லது பீதியை பரப்பவோ தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+