டெல்லி : இந்தியாவில் தான் பொருளாதார மந்தம், வேலையிழப்பு என்று ரவுண்டு கட்டி வரும் பிரச்சனை என்றால், லண்டனில் என்ன பிரச்சனை? அதிலும் லண்டனில் பிரச்சனை என்றாலும், அதனால் பாதிக்கப்படுவதும் நம் இந்தியர்களே. ஆக மொத்தத்தில் நம் இந்தியர்களுக்கு, அஷ்டமத்து சனி இருக்குமோ?
உலக நாடுகள் பூராவும், சுமார் 67 நாடுகளில், 3,900 கிளைகளை கொண்டுள்ளது இந்த வங்கி. எனினும் தற்போது இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் உள்ள பேக் ஆபிஸ் ஊழியர்களில் (back offices), 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

பிரிட்டீஸ் கடன் வழங்குனரான ஹெச்.எஸ்.பி.சி, உலகளாவிய நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில், இந்திய அலுவலகங்களில் உள்ள 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளது.
சர்வதேச அளவில் 2.38 லட்சம் ஊழியர்கள் பணி புரியும் இந்த வங்கியில், இந்த பணி நீக்கம் மிகக் குறைவானது தான் என்றும், இது மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பணி நீக்கமானது இந்தியாவில் புனே மற்றும் ஹைத்ராபாத்தில் உள்ள நிர்வாக மேலாண்மை மட்டத்தில் உள்ளது என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் உலகளாவிய திறன் மையம் (global capability centres') என்று அழைக்கப்படும் இவ்வங்கியின் பேக் ஆபிஸ் அலுவலர்கள் மட்டும் 15,000க்கும் மேல் இருப்பர் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஒரு வங்கி செய்தித் தொடர்பாளர், ஹெச்.எஸ்.பி.சி தனது வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, தொடர்ந்து அதன் பணியாளர்களின் திறனை மதிப்பாய்வு செய்து வருகிறது.
அந்த வகையில், இது தனிப்பட்ட செயல்திறன் மற்றும் திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆராய்ச்சி செய்து பின்னரே, இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வேலையிழப்புகளின் எண்ணிக்கை 150 என்று கூறப்பட்டாலும், கடந்த வியாழக்கிழமையன்று கூறப்பட்ட அறிக்கையில், மொத்த வேலை இழப்புகளின் எண்ணிக்கை 200 என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை, பல நிறுவனங்கள், பல வங்கிகள் எடுப்பது தான் என்றாலும், இந்தியாவில் நிலவி வரும் சிக்கலான பிரச்சனைகள் உள்ள இந்த நேரத்தில் எடுத்திருப்பது, மிகவும் துரதிஷ்டவசமானதே என்றும் கூறப்படுகிறது.
எப்படி எனினும் லண்டனில் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை இன்னும் பாதிக்கும் என்ற கவலைகள் நீடித்து வருகின்றனவாம். ஆக மொத்தம் இன்னும் பணி நீக்கம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications