ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணும்?

மும்பை : இந்திய பங்கு சந்தைகளின் வர்த்தக கடைசி நாளான இன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. அதிலும் இன்று காலை 72 ரூபாய்க்கும் மேல் வரை சென்று வர்த்தகமாகியது.

எனினும் தற்போது (2.35 மணியளவில்) 71.59 ரூபாயாக, இதன் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இதற்கு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணும்?

மேலும் அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரால், சீனாவின் யுவான் மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக, அந்த நாடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டாலர் மதிப்பு அதற்கு எதிர்மாறாக ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் தற்போது முதலீட்டாளர்கள் கவனம் அமெரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் படி அமெரிக்கா சந்தைகளில் முதலீடு செய்வதற்காக, முதலீட்டாளர்கள் உலகம் முழுக்க இருக்கும் தங்களது முதலீடுகளை வெளியே தற்போது எடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் அதிகப்படியான அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியே, இன்று இந்தியா ரூபாயின் மதிப்பு காலை 72 ரூபாய்க்கும் மேல் சென்று, தற்போது சற்று அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மாத வீழ்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த வீழ்ச்சியானது நடப்பு ஆண்டில் 2019ல் இதுவரை மொத்தம் 3.10 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர புரோக்கிங் நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் இந்த நிலையில், இந்த இரு நாடுகளும் பின் வாங்குவதாக தெரியவில்லை. இதனால் கடந்த அக்டோபர் 1 முதல் தற்போது வரையியலான பிரச்சனை, மேலும் யுவான் மதிப்பினை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர், அமெரிக்கா சீனா வர்த்தக போரால், உலக பொருளாதாராத்தில் மந்த நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நிச்சயம் அமெரிக்காவில் இன்னும் வட்டி குறைப்புகள் கண்டிப்பாக தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் வட்டிக் குறைப்புகள் இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களின் கவனத்தை, அமெரிக்காவின் பக்கம் ஈர்ப்பதாகவே இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+