ஆர்பிஐ சொல்வது புரியவில்லையே..! பொருளாதார மந்த நிலையால் புதிய வார்த்தைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய செய்திகள் நமக்கு நிம்மதி கொடுப்பதாக இல்லை. எப்போது பார்த்தாலும் வேலை இழப்பு, உற்பத்தி சரிவு, கம்பெனிகள் மூடல், மோசமான காலாண்டு முடிவுகள், ஜிடிபி வளர்ச்சிக் கணிப்புகள் குறைப்பு... என எல்லாமே நம்மை பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த பொருளாதார மந்த நிலைக்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டிய மத்திய ரிசர்வ் வங்கி சொல்வதே புரியாத அளவுக்கு புதிய புதிய வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆர்பிஐ சொல்வது புரியவில்லையே..! பொருளாதார மந்த நிலையால் புதிய வார்த்தைகள்..!

சமீபத்தில் தான் இந்தியாவின் பணக் கொள்கை கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதில் வழக்கம் போல ரிசர்வ் வங்கியின் ஆளுநர், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்த முறை பணக் கொள்கைக் கமிட்டியில் இருந்த சேத்தன் கதே என்பவர் "estimates of economic growth in India have unfortunately been subject to a fair degree of floccinaucinihilipilification. Notwithstanding this, growth is likely to pick up" என ஒரு புதிய வார்த்தையைப் பயன்படுத்திப் பேசினார். இந்த floccinaucinihilipilification என்கிற வார்த்தைக்கு "ஒரு விஷயத்தை மதிப்பற்றது என மதிப்பீடு செய்வது" என பொருள் சொல்கிறது கூகுள் அகராதி.

ஆக "இந்தியாவில் கணிக்கப்படும் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள் எல்லாம் துரதிர்ஷ்டவசமாக மதிப்பற்றதாக இருக்கிறது. இருப்பினும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணத் தொடங்கும்" எனச் சொல்லி இருக்கிறார். இது தான் அவர் புதிய வார்த்தை பயன்படுத்திச் சொல்ல வந்த விஷயம்.

அதே போல ஒரு கூட்டத்தில் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களும் ஒரு புதிய ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி "I am not saying we maintain a Panglossian countenance and smile away every difficulty" எனப் பேசி இருக்கிறார். Panglossian என்கிற வார்த்தைக்கு கூகுளிடம் பொருள் கேட்டால் "சிரமமான காலங்கள் முடிவதற்குள்ளேயே பெரிய நம்பிக்கை உடன் இருப்பது" எனப் பொருள் கொடுக்கிறது.

 

"நாங்கள் எப்போதும் ஒரு பெரிய நம்பிக்கை உடனும் சிரித்த முகத்தோடும் எல்லா சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு கடந்து வரச் சொல்லவில்லை" என புதிய வார்த்தையைப் பயன்படுத்திச் சொல்லி இருக்கிறார் நம் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

சார், ஏற்கனவே பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது நீங்கள் சொல்வதையும் இப்படி கூகுளிடம் கேட்டுக் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எப்படி..? கொஞ்சம் எளிதாக எளிய மக்களுக்கும் புரியும் ரீதியில் சொன்னால் தானே வேலைக்கு ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI new words: rbi is using new words to speak about our Indian economy

RBI new words: rbi is using new words to speak about our Indian economy
Story first published: Friday, August 23, 2019, 12:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X