கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதுமே இந்தியாவில் ஒருவர் அரசு பணியில் சேர்வது என்பது மிகப் பெரிய விஷயம். ஆனால் ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்து சம்பளமும் வாங்கிக் கொண்டே வந்திருக்கிறார். அவர் பெயர் சுரேஷ் ராம். இந்த ஆச்சர்யமான சம்பவம் பீஹார் மாநிலத்தில் நடந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் பீகார் மாநிலத்தில் மூன்று வெவ்வேறு அரசுத்துறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது ஒரே நபர் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது

கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் பணியாற்றிய அதிசய மனிதர்..!

 

எனவே அரசுத் துறையினர் சம்பந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் வந்து சந்திக்கச் சொல்லி இருக்கிறார்கள் .ஆனால் நம் சுரேஷ் ராமோ வெறும் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அரசு அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார். அரசு அதிகாரிகளோ அரசுப் பணியில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வருமாறு திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் அதன் பின் சுரேஷ் ராம் ஆளைக் காணவில்லை

ஒரே பெயர் கொண்ட நபர்கள் அரசின் பல்வேறு துறைகளில் வேலை செய்வது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் ஒரே பெயர் ஒரே பிறந்த தேதி ஒரே விலாசம் என அனைத்தும் ஒன்றாக இருந்ததால் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மேலாண்மை அமைப்பு இவரை தனியாக வட்டம் போட்டு காட்டி இருக்கிறது

பீகார் மாநிலத்தின் இணைச் செயலர் சந்திரசேகர் பிரசாத் சிங் இவரை பணிநீக்கம் செய்யச் சொல்லி இருக்கிறார் அதோடு இவர் பெயரில் முதல் தகவல் அறிக்கையையும் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம்

நம் சுரேஷ் அண்ணண் கட்டுமானத் துறையில் உதவி பொறியாளர் ஆகவும், நீர் மேலாண்மை துறையில் பங்கா எனும் மாவட்டத்தில் ஒரு அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாகவும் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி சம்பளம் வாங்கி பதவி உயர்வுகளும் கூட வாங்கி இருக்கிறாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

a man who worked in 3 different government departments simultaneously for 30 years and getting salary promotion

a man who worked in 3 different government departments simultaneously for 30 years and getting salary promotion
Story first published: Saturday, August 24, 2019, 18:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?