அமேஸானுக்கு ஆப்படிக்கும் சட்டம்..! ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சிக்கல்..!

ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனம் தான் பிக் பஸார் நிறுவனத்தை நடத்தி வருகிறது. ஆனால் ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் ப்ரொமோட்டராக இருப்பது ஃப்யூச்சர் கூப்பன் என்கிற நிறுவனம்.

இப்போது ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் ப்ரொமோட்டரான ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வாங்கப் போவதாகச் சொல்லி இருக்கிறது அமேஸான்.

அமேஸான் டாட் காம் என் வீ இன்வெஸ்ட்மெண்ட் ஹோல்டிங் என்கிற நிறுவனம் தான் இந்த முதலீட்டை மேற்கொள்ளப் போகிறதாம்.

பிக் பஸாருக்கு இல்லை

பிக் பஸாருக்கு இல்லை

சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அமேஸான் முதலீடு செய்யும் பணம் ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்துக்கு போகும் என எதிர்பார்த்தது சந்தை, ஆனால் தற்போது சந்தை எதிர்பார்த்தது நடக்காமல், ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் ப்ரொமோட்டரான ஃப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்துக்கு போகிறது என தற்போது ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் தீபக் ஜசானி சொல்லி இருக்கிறார். இந்த சந்தை எதிர்பார்ப்பால் கடந்த வெள்ளிக்கிழமை ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவன பங்குகளின் விலை சுமார் 20 ரூபாய் சரிந்திருக்கிறது.

ஃப்யூச்சர் ரீடெயிலில் முதலீடு

ஃப்யூச்சர் ரீடெயிலில் முதலீடு

ஃப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனம், ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் 7.5 சதவிகித பங்குகளை வைத்து இருக்கிறார்களாம். இப்போது ஃப்யூச்சர்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் ஃப்ரொமோட்டரான ஃப்யூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை அமேஸான் நிறுவனம் வாங்கினால், மறைமுகமாக ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் 3.7 சதவிகித பங்குகளை வாங்கிக் கொள்வதாக பொருள்படும். அப்படி ஃப்யூச்சர்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கிக் கொண்டால் இப்போது என்ன பிரச்னை..?

சட்டம் என்ன சொல்கிறது

சட்டம் என்ன சொல்கிறது

அமேஸான் ஃப்யூச்சர்ஸ் குழும பங்குகளை வாங்குவதில் இரண்டு சட்டங்கள் மிக முக்கியமான கவனிக்கப் பட வேண்டி இருக்கிறது.
அதில் முதலாவது, இந்தியாவில் மல்டி பிராண்ட் ரீடெயில் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதம் வரை தான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய சிக்கல் இல்லை என வைத்துக் கொள்வோம்.
இரண்டாவது, ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை விற்கக் கூடாது. இது தான் பிரச்னை இப்போது.

சிக்கல்கள்

சிக்கல்கள்

தற்போது இந்தியாவில் ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனங்களான அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இந்த இரண்டாவது விதியை மீறி தங்கள் பொருட்களையே அதிகம் தங்கள் வலைதளங்களில் விற்பதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து கடுமையான புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை வாங்கியது அமேஸான். ஆகையால் பஇரண்டாவது விதிமுறைகள் படி, ஷாப்பர்ஸ் ஸ்டாப்பின் துணி மணிகளை அமேஸான் தன் வலைதளத்தில் விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி

கேள்வி

இப்போது நம் முன் ஒரு பெரிய கேள்வி எழுகிறது..? இப்போது ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் பங்குகளை அமேஸான் வாங்கினால், ஃப்யூச்சர் ரீடெயிலின் பொருட்களை அமேஸான் விற்கக் கூடாது என தெளிவாகப் புரிகிறது. ஆனால் ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனமோ ஏகப்பட்ட பொருட்களை தன் பெயரில் விற்கிறது, தயாரிக்கிறது, வாங்கி விற்கிறது. இப்படி நிறைய பொருட்களை அமேஸான் தன் வலைதளத்தில் விற்க முடியாது என்றால் இந்தியாவில் அதன் வளர்ச்சி என்னவாகும்..?

சிறு வியாபாரிகள்

சிறு வியாபாரிகள்

மறைமுகமாக இரண்டாவது சட்டம் அமேஸானுக்கு அப்படிப்பதாகவே இருக்கிறது. இதை அமேஸான் நிறுவனம் எப்படி கடந்து வந்து உலகின் இரண்டாவது பெரிய நுகர்வுச் சந்தையான இந்தியாவில் தன் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது, எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ரீடெயில் போன்ற வலுவான உள்ளூர் போட்டியாளர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறது போன்றவைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலகின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே தங்கள் வியாபாரத்தைச் செய்ய இத்தனை சிரமங்களைக் கடக்க வேண்டி இருக்கிறது என்றால், சின்ன சின்ன வியாபாரிகளின் நிலை..? அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+