மும்பை, நியூ டெல்லி: நேற்று மத்திய நிதி ஆமைச்சர் நிர்மலா சீதாரமனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆட்டோமொபைல் துறைக்குச் சொன்ன ஊக்குவிப்புகளால், மொத்த துறையும் மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் துறையின் முன்னோடிகள்.
அரசு ஆட்டோமொப்பைல் துறையின் தேவையை அதிகரிக்க, தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்டதிருக்கிறது என்கிறார் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆர் சி பார்கவா. இந்தியாவின் மொத்த கார் வியாபாரத்தில் மாருதி சுசூகியின் பங்கு 50 சதவிகிதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு வாகனப் பதிவுக் கட்டணத்தை அதிகரிப்பதையும் கைவிட்டிருக்கிறார்கள். இப்போது இந்த கட்டணம் தொடர்பான முடிவுகளை மாநில அரசுகள் கையில் தான் இருக்கிறது. இந்தியாவின் ஒன்பது மாநிலங்கள் சாலை வரியை அதிகரித்து இருக்கின்றன எனவும் சொல்லி இருக்கிறது.
இந்திய அரசு வங்கிகளில் கடன் சிக்கல்களை குறைக்க, வளர்ச்சியை அதிகரிக்க, ஒரு வாகனம் வாங்க தேவையான பணத்தை துறையில் குறைத்தது போன்ற மாற்றங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வர உதவ வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ட்டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குண்டர் புட்ஸே.
இந்திய ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த, வாகனங்களூக்கான தேய்மானத்தை 15 சதவிகிதம் அதிகரித்தது, அரசுத் தரப்பினர்கள் வாகனங்களை வாங்க இருந்தா தடையை நீக்கியது, இந்த வருடத்தில் வாங்கப்படும் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை தைரியமாகப் பயன்படுத்தலாம் போன்ற அறிவிப்புகள் வரவேற்க்கத்தக்கது எனச் சொல்லி இருக்கிறார்.
டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஷ்கர் பாரத் ஸ்டேஜ் 4 ரக வாகனங்கள் பயன்பாடு மட்டுமே வாடிக்கையாளர்களின் செண்டிமெண்டை மாற்றி வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்து விடும் எனச் சொல்லி இருக்கிறார்.
வாகனங்களுக்கான தேய்மானத்தை 15 அதவிகிதம் அதிகரித்ததால், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் புதிய வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் எனச் சொல்லி இருக்கிறார். இந்திய நகர் புறங்களில் சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாகன விற்பனைக்கு இந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் தான் பொறுப்பு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications