வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என முயற்சி செய்யும் சீனாவிற்கும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வர்த்தகப் போர் வெடித்து வருகிறது. சீனா அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பையும், வர்த்தக வாய்ப்பையும் பறித்துக்கொள்கிறது என்று டிரம்ப் துவங்கி பிரச்சனை தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிற்குப் போட்டியாகச் சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதீத வரி விதித்து வருகிறது. இந்த முறை 75 பில்லியன் டாலர் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - சீனா
அமெரிக்கா தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், சேவைக்கும் அதிகளவிலான வரி விதித்து அமெரிக்கர்கள் சீனாவை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதேபோல் சீனாவும் அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இருநாடுகளுக்கும் மத்தியில் தற்போது பாதிப்பு, மக்கள் நலன் ஆகியவற்றைத் தாண்டி ஈகோ பிரச்சனை பெரியதாக உள்ளது. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது தான் இந்த வர்த்தகப் போர்.
வெள்ளிக்கிழமை
இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராகச் சுமார் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவை மீது சீனா டிரம்ப் அரசு அறிவித்தற்கு இணையாக வரி விதித்துள்ளது.
இப்புதிய வரி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது சீன அரசு. மேலும் இது செப்டம்பர் 1 மற்றும் டிசம்பர் 15 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது. சீனா அறிவித்துள்ள 5 முதல் 10 சதவீத வரி சுமார் 5,078 பொருட்கள் மீது விதிக்கப்பட உள்ளது.
டிசம்பர் 15
இந்தியாவில் ரத்தவெள்ளமாக மாறிக்கிடக்கும் ஆட்டோமொபைல் துறையில், சீனாவில் அமெரிக்கா மகிப்பெரிய வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
இந்த வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு கார்களுக்குக் கூடுதலாக 25 சதவீத வரியும், ஸ்பேர் பார்ட்ஸ்-க்கு கூடுதல் 5 சதவீத வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. இது டிசம்பர் 15 முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இதுவரை சீனாவின் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதித்துள்ள நிலையில் அடுத்தச் சில மாதங்களில் மீதமுள்ள 300 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களுக்கு வரி வதிக்க முடிவு செய்துள்ளது.
சீனா 120 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு மட்டுமே வரி விதித்துள்ளது. ஆயினும் டிரம்புக்கு ஈகோ தீர்ந்தபாடு இல்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications