டெல்லி : தொடர்ந்து கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் அரசின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, கிட்டதட்ட கடந்த ஏழு மாதங்களாக விமான எரி பொருளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த வில்லை என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்தி விட்டன.
இந்த நிலையில் இந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான 4,500 கோடி மதிப்பிலான கடனுக்கு, 60 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முன் வந்துள்ளதாம்.

இந்தியன் ஆயில் கார்ப், மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் நிறுவனம், ஏர் இந்தியாவின் கொச்சின், புனே, பாட்னா, ராஞ்சி, விசாக், மொகாலி உள்ளிட்ட விமான நிலையங்களில் செயல்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருளை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக இந்த எரிபொருளுக்கான கட்டணத்தை இந்த விமான நிறுவனம் 90 நாட்கள் அவகாசத்தில் செலுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது இந்த நிறுவனம் 200 நாட்களுக்கு மேல் ஆகியும், இதுவரை கடனை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிலையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் எரி பொருளை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கொடுமை என்னவெனில், 4,500 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ள நிலையில், வெறும் 60 கோடி ரூபாயை இந்த நிறுவனம் 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் கொடுக்க முன்வந்துள்ளது தான். இதனால் கடுப்பில் உள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
இந்த பிரச்சனையால் மேற்கொண்டு எரிபொருளை வாங்க முடியாத இந்த நிறுவனம், தற்போது மேல் குறிப்பிட்ட 6 விமான தளங்களில் விமான சேவையை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விமானத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில், நாங்கள் கடன் பிரச்சனையில் தான் உள்ளோம். ஆனால் இந்த கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் எங்களது செயல்பாடுகள் முன்பை விட தற்போது நன்றாக போக ஆரம்பித்துள்ளது.
இதனால் செயல்பாட்டு லாபமும் கடந்த ஆண்டை விட, தற்போது லாபமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் இது போன்ற சமயத்தில் இந்த கடன் பிரச்சனை பிரச்சனையால், செயல்பாட்டை நிறுத்தியிருப்பது கவலையளிக்கிறது என்றும் கூறுகின்றனராம் விமான துறை அதிகாரிகள்.
தற்போது வரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 58,000 கோடி ரூபாய் கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications