வீழ்ந்து கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு, ஏற்கனவே பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் பல லட்சம் பேர் வேலை இழக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரிந்து வரும் பொருளாரத்தை தூக்கி நிறுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் தேக்க நிலையினை பற்றிய, ஏதேனும் சாத்தியமான கருத்துகள் வந்திராதா என்றும் எதிர்பார்க்கும் தருணத்தில், நம் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை குறித்து, அதை தாங்கள் மிக வரவேற்பதாக கூறியுள்ளனர் ஆட்டோமொபல் துறையின் முக்கிய உயர் அதிகாரிகள்.

இந்த நிலையில் இந்த நடவடிக்கைகளை ஒரு சாரர் சாடினாலும், ஆட்டோமொபைல் துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் இதை வரவேற்பதாகவே கூறியுள்ளனர்.
நீடித்து வரும் பொருளாதார மந்த நிலையால், ஆட்டோமொபைல் தேவை குறைந்துள்ள நிலையில், இந்த பெரும் சரிவையே சந்தித்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இனி அரசு நிறுவனங்களில் உள்ள பழைய வாகனங்களை மாற்றி புது வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார், இதனால் தற்போது ஆட்டோமொபைல் துறையினருக்கு ஏற்படும் அதிகப்படியான வீழ்ச்சி தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வங்கிகளிலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் கடன் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர வாகன கடனுக்கான வட்டியும் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் 2020 மார்ச்31க்கு முன் வாங்கப்படும் Bharat Stage IV எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும். பிஎஸ் 6 எஞ்சின் மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, Bharat Stage IV எஞ்சின் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற யூகங்களை மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, வாகனத் துறையில் தேவையை அதிகரிக்கும் வகையில் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கைகளை ஒரே அடியாக ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்தா விட்டாலும், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல, இந்த நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடாலமே தவிர, இது இதற்கான தீர்வல்ல என்றும், இத்துறை சார்ந்த நிபுனர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications