டெல்லி : அதிகளவிலான அன்னிய முதலீடுகளுக்கான வரி மற்றும் சர்சார்ஜ்கள் இந்தியாவில் அதிகம் என்பதாலும், இது குறித்த மாற்றம் கடந்த பட்ஜெட்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஏதும் இல்லாத நிலையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னிய முதலீடுகளை அதிகரிக்க சில வரிச் சலுகைகளை அறிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் பங்குகள் பரிமாற்றம் செய்வதன் மூலமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ, வணிக அறக்கட்டளையிலோ பரிமாற்றம் செய்யப்படும் போது எழும், நீண்டகால மற்றும் குறுகிய கால ஆதாயங்களின் மூலம் ( 115AD கீழ்), செலுத்த வேண்டிய வரி திரும்ப பெறப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தவிர மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு நிதித்துறை விதித்த கூடுதல் கட்டணத்தை (Act (2) of 2019) திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அன்னிய முதலீடுகள் அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்ற நிலையில், முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இந்த வரி குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் அன்னிய முதலீட்டாளர்களின் பார்வையில் பெரும் சுமையாகவே கருதப்பட்ட வந்த வரியானது, தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரி குறைப்பு நடவடிக்கை, அன்னிய முதலீட்டாளர்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதாமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கு உதவுகிற அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு தற்போது எடுத்து வருகிறது, இந்த நிலையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலேயே அரசு இது போன்ற பல சலுகைகளை அறிவித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இது தவிர ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, முதலீட்டாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஏஞ்சல் வரி விதியை திரும்ப பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரச்சினைகளை கவனித்து, அதற்காக பிரச்சனைகளையும் களைந்து சரியான தீர்வு காண்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் தலைமையில் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications